ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதை தடுக்கத்தவறிய நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தைப்பெற்றுள்ளது. நியூயோர்க்கை தலைமையகமாகக்கொண்ட ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தப்பட்டியலில் ஈராக் முதலிடத்தைப்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் 2000 ஆம் ஆண்டு மயில்வாகனம் நிமலராஜன் கொல்லப்பட்டது முதல் 8 ஊடகவியலாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்தக்கொலைகள் தொடர்பான உரிய விசாரணைகள் எவையும் உரியமுறையில் முன்னெடுக்கப்படவில்லை என ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
நாளை உலகளாவிய வகையில் ஊடக சுதந்திர தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் இலங்கையின் ஊடகவியலாளர் ஒன்றியங்கள் உட்பட சர்வதேச ஊடக அமைப்புக்களும் இலங்கையின் ஊடகத்துறை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்படத்தக்கது.
Friday, 2 May 2008
ஊடகவியலாளர்கள் கொலை – தடுக்கதவறியமை இலங்கை 5 ஆவது:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment