Friday, 2 May 2008

பிள்ளையான் குழு: அறிக்கை கோரியுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்:

பிள்ளையான் குழு பற்றிய பூரண அறிக்கையொன்றை வழங்குமாறு தம்மிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதத்தில் இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜனநாயகவாதிகளின் சம்மேளனத்திலும் பிள்ளையான் குழு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து சர்வதேச பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்குத் தேர்தல்களின் போது பிள்ளையான் குழு ஆயுதங்களைக் காட்டி தேர்தல் கொள்ளையில் ஈடுபட முயற்சிப்பதாகவும், இந்த நிலைமை அரசாங்கத்திற்கும், பிள்ளையான் குழுவிற்கும் இது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

No comments: