இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா தலையிட்டு இரு தரப்புக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று தமிழக முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை விவகாரத்தில் ஒரு சுமூகமான தீர்வு ஏற்படும் வகையில் இந்தியா தலையீடு செய்ய வேண்டுமென்று தமிழக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அதனையடுத்து இந்திய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான ராஜ்நாத் சிங்; கூட இதே வகையான கருத்தை சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அந்த நிலையிலேயே பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்தக் கருத்தும் வெளிவநிதுள்ளது.
இது குறித்து பீ.பீ.சீயிடம் கருத்து வெளியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன்
‘இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா தலையிடும் சாத்தியம் இருக்கிறதென்றே கருதுகிறேன்.
இருதரப்பினரும் போர்நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு இந்தியா முதலில் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் உயிர் சேதங்கள் பொருட்சேதங்களைத் தவிர்க்கலாம். பிறகு எவ்வாறு தீர்வு காண்பதென்பதனை பேசி முடிவு செய்யலாம். முதலில் நடைபெறும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர இந்தியா தலையிடுவது அவசியம்.
‘ஆனால் தற்போதுள்ள இந்திய அரசு தலையிட வேண்டாம் என்றே நினைக்கிறது. அதற்கு ஒரு காரணம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியினுடைய மரணம்.
அந்த அடிப்படையில் மறுபடியும் ஏன் வம்பு என்று நினைக்கக்கூடும். ஆனால் மனிதாபிமான அடிப்படையிலும், தமிழர்கள் என்ற உணர்வின் அடிப்படையிலும் இந்திய அரசு முன்முயற்சி எடுத்து, இந்த நேரத்தில் செயற்படுவது அவசியம் எனக் கருதுகிறேன். எனினும் தமிழக சட்டமன்றத்தில் அரசியல் கட்சிகள் நிறைவேற்றிய தீர்மானம் கூட ஒரு ஒப்புக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என நிநைக்கிறேன். உண்மையில் பிரச்சினையின் முழுமையை உணர்ந்து மேற்கொள்ளப்பட்டதாக அது இல்லை.
பிரச்சினையின் ஏனென்றால் இன்று இலங்கையில் நடப்பது மிகப்பெரிய உள்நாட்டுப் போர் இலங்கை அரசு தனது விமானப் படையைக் கொண்டு அங்கு மிகப்பெரிய தாக்குதலை நடத்தி வருகிறது. அதனால் அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
அங்கு இருக்கிற மக்கள் இந்தியாவுக்கு கூட வருவதற்கு முடிவதில்லை. அகதிகயாகக் கூட தமிழகம் வரமுடியாத நிலை. அவர்கள் கடலிலேயே மூழ்கடிக்கப்படுகிறார்கள். இப்படிப் பார்க்கும் போது பிரச்சனையின் தன்மை மோசமாகிக் கொண்டே போகிறது. ஒரு அரசாங்கமே தன்னுடைய மக்களை கொன்று குவிக்கின்ற நடவடிக்கை என்பது மிகக் கொடூரமானது. அதனாலே எந்த அளவிற்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல் கட்சிகள் இதனைப் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் எதற்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி வைப்போம் என்ற போடி போக்கில் நிறைவேற்றி உள்ளார்களே தவிர டில்லிக்குச் சென்றோ, அல்லது பிரதமரைச் சந்தித்தோ, அல்லது இந்திய அரசை வற்புறுத்தி, நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வருத்தத்திற்கு உரிய ஒன்றாகும்.’
தொடர்கிறார் பண்ருட்டி ராமச்சந்திரன் ‘80 களில் இருந்த அழுத்தம் இல்லை தற்போது இல்லை என்பது உண்மைதான. தமிழ்நாட்டு மக்களிடையே இலங்கைத் தமிழர்கள் பற்றிய விழ்ப்புணர்வு மங்கி விட்டது. தமிழ்நாட்டு மக்களிடத்திலே வாக்குகளை வாங்கினால் போதும் என்ற நிலைப்பாட்டில் அரசியல் நடத்துகின்ற கட்சிகள் அக்கறை காட்டாததில் வியப்பில்லை. ஆனால் அதே நேரத்தில் காலம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதனையும் உணர வேண்டும். இன்றைக்கு ஆயுதம் ஏந்திப் போராடித் தான் தமது உரிமைகளை பெறமுடியும் என்ற நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதனுடைய பின்னணியைப் புரிந்து கொண்டு எதிர்காலத்திலே தமிழ்மக்களும் அங்குள்ள சிங்கள மக்களும் சேர்ந்து வாழவேண்டும் என்ற பரந்த நோக்கத்தோடு இந்திய அரசு அதில் சரியான அக்கறை எடுத்துக் கொள்வது தான் சரியான நிலைப்பாடாக இருக்கும். கடந்தகாலங்களில் நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்த்து எதிர்காலத்தை இழந்து விடக் கூடாது என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன். ஐ.நா மன்றத்தில் சென்று இந்தப் பிரச்சனையை நான் எழுப்பியபோது உலகநாடுகள் எல்லாம் ஒரு கருத்தைக் கூறின. இலங்கை இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு ஐநா மன்றம் முன்முயற்சி எடுத்து தீர்ப்பதற்குப் பதில், பக்கத்திலே இருக்கும் இந்தியா முயற்சி எடுப்பதுவே சிறந்தது. இலங்கை சிறு நாடுதானே என கூறினார்கள். ஆகாயினாலே எவ்வாறு நேபாளத்தை இளந்து விட்டு இந்தியா இப்போது பரிதவிக்கிறதோ, அதே நிலமை இலங்கையிலும் ஏற்பட்டு விடக் கூடாது அண்டைநாடான ஒருநாட்டிலே ஏற்படுகின்ற பிரச்சனை, பக்கத்தி வீட்டிலே தீப்பிடித்தால் நம்வீட்டிலும் தீப்பிடிக்கும் என்ற உணர்விலே இந்தப் பிரச்சனையை அணுகும் அவசியம் இந்திய அரசிற்கு ஏற்பட்டு இருக்கிறது. இது ஏதோ சம்பந்தம் இல்லாத பிரச்சனை எனக் கருதினால் மீண்டும் ஒரு நோபாளமாக அதாவது இந்தியாவுக்கு விரோதமான நாடாக இலங்கை மாறிவிடும்.’ ஏன பண்ருட்டி ராமச்சந்திரன் தனது செவ்வியில் தெரிவித்துள்ளார்.
நன்றி பீ.பீ.சீ
Thursday, 1 May 2008
பக்கத்தி வீட்டில் தீப்பிடித்தால் நம்வீட்டிலும் தீப்பிடிக்கும்: பண்ருட்டி ராமச்சந்திரன்:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment