Wednesday, 7 May 2008

உணவு விலை உயர்வால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஏ.டி.பி., 50 கோடி டாலர் நிதி உதவி

மேட்ரிட் : உணவுப்பொருட்கள்ளின் கடுமையான விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உடனடி உதவியாக ஆசியன் டெவலப்மென்ட் பாங்கு ( ஏ.டி.பி., ) 50 கோடி டாலர் நிதி உதவி அளிக்கிறது. நான்கு நாள் நடக்கும் வருடாந்திர மீட்டிங்கில் கலந்து கொள்ள ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் வந்துள்ள ஏ.டி.பி.,யின் தலைவர் ஹருகிகோ குரோடா இதை தெரிவித்தார். சமீபத்தில் உலகம் முழுவதும் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. சுமார் 100 கோடி பேருக்கு தேவையான சத்தான உணவு கிடைக்காத நிலை உருவாகும் என்று தெரிய வருகிறது. எனவே அவர்கள் வேறு நாடுகளில் இருந்து உணவுப்பொருட்களை வாங்கிக்கொள்ள ஏதுவாக உடனடி உதவியாக 50 கோடி டாலரை ( சுமார் 2000 கோடி ரூபாய் ) ஆசியன் டெவலப்மென்ட் பாங்கு கொடுக்க முடிவு செய்திருக்கிறது. மேலும் இந்த நாடுகளில் விவசாயத்தை மேம்படுத்த நாங்கள் கொடுக்கும் கடனுதவியைஎம் இரட்டிப்பாக்கி, இந்த வருடத்தில் 2 பில்லியன் டாலர் ( சுமார் 8000 கோடி ரூபாய் ) கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments: