வீமல் வீரவன்ஸ தரப்பினர் கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இன்று ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தனர். இந்த மாநாட்டில் விமல் அணியை சேர்ந்த மேல் மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பெல்லன, சபரகமுவ மாகாண சபையின் உறுப்பினர் பிரியஞ்சித் விதாரண ஆகியோர் ஜே.வீ.பீயின் மீது குற்றச்சாட்டுகiளை முன்வைத்ததை அடுத்து, ஊடக மாநாட்டில் குழம்பமான நிலையேற்பட்டது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மெனராகலை மெதகம பிரதேச சபை உறுப்பினர் உமறு லெப்பே நியாஸ் இந்த ஊடக மாநாடு ஜே.வீ.பீக்கு எதிரான சூழ்ச்சி எனவும் மொனராகலை பிரதேச கரும்பு விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விளக்கும் நோக்கில் தான் இங்கு அழைத்து வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தொண்டு அடிப்படையில், எதுவித பொருளாதார லாபங்களை எதிர்நோக்காத நிலையில் கட்சிக்காக சேவையாற்றும் தன்னை போன்ற மக்கள் பிரதிநிதிகளை பணத்தை கொடுத்து கொள்வனவு சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாகவும் நியாஸ் குறிப்பிட்டார். அந்த முரண்பாடான குழப்பை அடுத்து, அந்த ஊடகவியலாளர் மாநாடு இடைநிறுத்தம் செய்யப்பட்டது,
Wednesday, 7 May 2008
விமல் வீரவன்ஸ குழு: ஊடக மகாநாட்டில் முரண்பாடு:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment