Saturday, 17 May 2008

இந்தியாவுக்கு ஆபத்து:சீனா 50 ஏவுகணைகளை இந்தியாவை குறி பார்த்து நிறுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

Image இந்தியாவின் எதிரி நாடுகளில் சீனாவும் ஒன்று. இந்தியாவில் ஏராளமான நிலப் பகுதிகளை ஆக்கிரமித்து வைத்து இருப்பதுடன் சிக்கிம், அருணாசல பிரதேசம், காஷ்மீரின் ஒரு பகுதி தனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகிறது.

அடிக்கடி சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வருகின்றனர். சமீபத்தில் சீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒன்று இந்திய கடற்பகுதிக்குள் நடமாடியது கண்டு பிடிக்கப்பட்டது.ஏதோ ஒரு திட்டத்துடன் சீனா இப்படி அத்துமீறுவதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் சீனா 50 ஏவுகணைகளை இந்தியாவை குறி பார்த்து நிறுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்கா செயற்கை கோள் ஒன்று எடுத்த படத்தில் சீனா ஏவுகணைகளை இந்தியா நோக்கி நிறுத்தி இருப்பது தெளிவாக தெரிந்தது. இந்த படத்தை அமெரிக்க ராணுவ உளவுத்துறை வெளியிட்டு உள்ளது.

சீனாவில் வட மத்திய பகுதியில் உள்ள டெலிங்கா அருகே இன்று இந்தியாவை நோக்கி நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் டி.எப்.21 என்ற நடுத்தர ரக ஏவுகணையாகும். 2150 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடிய சக்தி கொண்டது. இதன் மூலம் அணுகுண்டை வீசலாம். இவற்றின் மூலம் இந்தியாவில் வட மாநில நகரங்கள் அனைத்தையும் தாக்க முடியும். 200 முதல் 300 கிலோ வரையான குண்டுகளை இதில் வைத்து அனுப்பலாம்.

இதே போல ரஷியாவில் தென் பகுதியை குறி வைத்தும் ஏவுகணைகளை சீனா நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் சீனாவுக்கு இந்தியாவை தாக்கும் திட்டங்கள் இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

1 comment:

ttpian said...

india's foreign policy has been kept in deep freezer;india will not take steps to repair the damage:it will make a mess further!