மணலாற்றில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறீலங்காப் படையினர் தரப்பில் 5பேர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் சிறீலங்காப் படையினர் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி படை நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிறீலங்கப் படையினரின் முன்னேற்ற முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகளின் மகளிர் படையணிகளுள் ஒன்றான மேஜர் சோதியா படையணி தாக்குதல்களைத் தொடுத்து சிறீலங்காப் படையினரை ஓட ஓட பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சிறீலங்காப் படையினர் கைவிட்டுச் சென்ற ரி-56 - 2 ரக துப்பாக்கி-01, நடுத்தர ரவைகள் - 9,000, ரவைக்கூடுதாங்கி அணிகள் - 04, பிகே-ரவைகள் - 2,000, பிகே ரவை இணைப்பிகள் - 500, சுடுகுழல் - 01, டொப்பிடோக்கள் - 04, படைப்பை - 01, தலைக்கவசங்கள் - 04, ஏகேஎல்எம்ஜி ரவை இணைப்பிகள் - 300 ஆகிய படைக்கருவிகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
Saturday, 24 May 2008
மணலாறு முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளின் சோதியா படையணியால் முறியடிப்பு: 5 படையினர் பலி!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment