புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமது கட்சியினால், ஜே.வீ.பீக்கு எதுவித சவால்களும் இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
விமல் தரப்பின் புதிய கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் கொள்கை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சுமார் ஒன்ரை மணிநேரம் உரையாற்றிய விமல், தமது கட்சி ஐக்கிய தேசிய கட்சிகும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குமே சவாலை ஏற்படுத்தும்.
பத்து வருடங்கள் பூர்த்தியாகும் முன்னர் இலங்கையர்கள்,தமது வீதிகளில் தமது எரிபொருளை கொண்டு, வாகனங்களை செலுத்தி செல்ல முடியும் என குறிப்பிட்டார்.
இந்த நாட்டை ஆட்சி செய்த கட்சிகளால் 60 வருடங்கள் செய்ய முடியாதவற்றை தமது கட்சி 10 வருடங்களில் செய்து முடிக்கும் எனவும் அவர் கூறினார். தான் ஆரம்பித்துள்ள புதிய கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அவர் ஜே.வீ.பீயினருக்கும் அழைப்பு விடுததுள்ளார்.
Wednesday, 14 May 2008
60 வருடங்கள் செய்ய முடியாதவற்றை தமது கட்சி 10 வருடங்களில் செய்து முடிக்கும் --விமல் தரப்பின் புதிய கட்சியான தேசிய சுதந்திர முன்னணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment