Wednesday, 14 May 2008

மாற்று காட்சிக்கு அதரவு வழங்கியோர் மீது கல்லாறு, களுவாஞ்சிகுடியில் பிள்ளையான் குழுவினர் தாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த கிழக்கு மாகாண தேர்தலில் தமிழ் ஜனநாயக தேசிய முன்னணியின் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய கல்லாறு, மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச மக்களின் வீடுகளுக்கு சென்று பிள்ளையான் குழுவினர் தாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரி.எம்.வி.பியின் அலுவலக பொறுப்பாளர் செந்தூரன் இந்த தாக்குதல்களை நெறிப்படுத்தி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 11ஆம் திகதி முதல் இந்த தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையிடம் முறைப்பாடு செய்தால் குடும்பத்துடன் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என பிள்ளையான் குழுவினரால் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரியவருகிறது.

இந்த அச்சுறுத்தல் காரணமாக எவரும் முறைப்பாடுகளை செய்வதில்லை. குகநாதன் என்ற வேட்பாளரின் ஆதரவாளர்கள் பலர் பிள்ளையான் குழுவின் இந்த தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர்.

இவர்களில் சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒருவரின் மோட்டார் சைக்கிளையும் இந்த குழுவினர் பறித்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் பிள்ளையானுக்கு எதிராக தேர்தல் பணிகளில் ஈடுபட்ட பலர் மரண அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் அச்சம் காரணமாக இரவில் நித்திரை கொள்வதை தவிர்த்து வருவதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments: