நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மூன்று உறுப்பினர்களுக்கு விடுதலைப்புலிகளுடன் நேரடியாக தொடர்பு இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம்சுமத்தியுள்ளது.
இந்த மூன்று பேரும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை தோற்கடிக்க மேற்குலத்தை சேர்ந்த நாடுகள் கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரின் ஊடாக மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட்டதாகவும் எனினும் அவர்கள் தமது இலக்கை அடைய முடியாது போனதாகவும் ரணவக்க குறிப்பிட்டார்.
கொழும்பு வெள்ளவத்தை ஒமேகா இன் விடுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார். இந்த நிலையில் வெளிநாட்டு தூதரங்கள் தற்போது கிழக்கு மாகாண தேர்தலில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார்.
No comments:
Post a Comment