Monday, 19 May 2008

பூஸாவுக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு முஸ்தீபு

கொழும்பு வெலிக்கடை நியு மகசின் சிறையிலிருந்து கடந்த 10ம் திகதி மாலையில் திடீரென பூஸாவுக்கு மாற்றப்பட்ட 68 தமிழ் அரசியல் கைதிகளும் ப10ஸாவில் தங்களுக்கு அடிப்படை அடிப்படைவசதி செய்துதரப்படவில்லை என தெரிவித்து அதனை ஆட்சேபிதது உண்ணாவிரதம் போன்ற ஒரு போராட்டம் ஒன்றில் ஈடுபடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றனர் என நம்பகரமாக அறியவருகிறது.

பூஸாவில் போதிய அடிப்படை வசதிகள் அற்ற இடத்தில் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என கைதிகள் சார்பில் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

இக்கைதிகள் பூஸாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோது அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டனர் என்றும் அவர்களில் சிலர் அங்குள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தாக்கப்பட்டனர்.

என்றும் முறைப்பாடுகள் எழுந்தமை தெரிந்ததே இவ்வாறு பூஸாவுக்கு இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளில் 13 பேர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை எதிர்நோக்கியிரந்த காரணத்தால் நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட பின்னர் நியூமகசின் சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர் எனினும் நேற்று மதியம் திரும்பவும் அவர்கள் கொண்டுசெல்லப்பட்டுவிட்டனர் என அறியவந்தது.

No comments: