கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் போது தமிழ் இனவாதத்தையும், முஸ்லிம் இனவாதத்தையும் உருவாக்கி அதன் மூலம் கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதள்மூலம் நாடு பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று (மே12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தல்களை ஓர் நியாயமான தேர்தலாக எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1978ம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளின் கை, கால்களை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன உடைத்ததாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
1981ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்களின் போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அடியாட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வன்முறைச் சம்வங்கள் இடம்பெற்றன அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஓர் எதிர்விளைவாகவே தமிழ் இளைஞர் யுவதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைப் போன்றே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் இவ்வாறானதொரு முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றிகொள்ளும் நோக்குடனேயே 110 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை ஜனாதிபதி அமைத்துள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமைக்கு எதிராக விரிவான தேசிய முன்னணியொன்றை அமைத்து ஜே.வி.பி. மக்கள் நலனுக்காக தொண்டாற்ற உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Monday, 12 May 2008
81ல் ஜே.ஆர். மேற்கொண்டதனை, இன்று மஹிந்த கிழக்கில் மே;றகொண்டுள்ளார் - ஜே.வி.பி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment