அனுராதபுரம் மாவிளச்சி பிரதேசத்தில் பௌத்த மதகுருவை இலக்கு வைத்து, முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டு தாக்குதலில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்துள்ளனார்.
சம்பவத்தில் பிக்கு காயங்கள் இன்றி உயிர் தப்பியதாக தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் அறிவித்துள்ளது. மன்னார் பூரண ராஜமஹா விகாரையின் காஹாட்டகஸ்திகிலியே வந்தானந்த தேரர் பேமடுவ என்ற பிரதேச வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போது நேற்றிரவு 9.45 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தேசிய பாதுகாப்பு ஊடக தகவல் மையம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது, பிக்கு முச்சக்கர வண்டியில் இருக்கவில்லை. சம்பவத்தில் காயமடைந்த சாரதி பேமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Tuesday, 6 May 2008
அனுராதபுரத்தில் கிளைமோர் தாக்குதல்:
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
kacchada samy
kacchada (a)samy
Post a Comment