கிழக்கு மாகாணசபையில் தனித்துச் செயற்படப்போவதாக மாகாணசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜே.வி.பி.யின் உறுப்பினர் விமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மக்களுக்கு சார்பாகவே தமது கட்சி செயற்படும் என அவர் கூறியுள்ளார்.
மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைப் பாதுகாக்கும் நோக்கில், அனைத்து சமூகங்களுக்கும் பயன்கிடைக்கும் வகையில் செயற்படும் நோக்கிலேயே நிர்வாகத்தைப் பெறுப்பேற்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சமூக ரீதியாக காணப்படும் சிந்தனைகளை உடைத்து சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படக்கூடியவகையில் நாங்கள் செயற்படுவோம்” என அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து எவரும் தனது ஆதரவைக் கோரவில்லையெனத் தெரிவித்திருக்கும் விமல் பியதிஸ்ஸ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குத் தனது ஆதரவைக் கோரவேண்டிய தேவை இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணசபையில் அரசாங்கத்துக்குக் கிடைத்த இரண்டு மேலதிஆசனங்களுக்குமான நியமனங்கள் குறித்து அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மோனகுருசாமி மற்றும் பிரியந்த பிரேமகுமார ஆகியோர் மேலதிக ஆசனங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment