வடக்கு கிழக்கு இணைந்த ஆட்சியே எமது தீர்வாகும் தமிழர் பிரச்சனைக்கு மாகாண ஆட்சி ஒருபோதும் தீர்வாகமாட்டாது கிழக்கு மாகாண முதலமைச்சராக எவர் வந்தாலும் நாம் அதுகுறித்து அலட்டிக்கொள்ள போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவில் ஏற்பட்ட இழுபறி நிலை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் இதுகுறித்து மேலும் தெரிவித்தாவது நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலை நிராகரிக்குமாறும் பகிஷ்கரிக்குமாறும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது
இந்த கோரிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் கிழக்கு மாகாணசபை தேர்தலில் அறுபத்தியொரு சதவீதமானவர்கள் வாக்களித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது தமிழ் மக்களை பொருத்தமட்டில் 41 சதவீதமானவர்கள் வாக்களித்திருப்பாக தெரிவிக்கப்படுகிறது வாக்களிக்க விரும்பாத தமிழ் மக்களின் வாக்குகள் போடப்பட்டுள்ளன திருட்டு வாக்கு அளிக்கப்பட்டுள்ளன
மொத்தத்தில் அங்கு வாக்கு கொள்ளையே இடம்பெற்றுள்ளன திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தமட்டில் அரசாங்கம் படுதோல்வி அடைந்துள்ளது கல்முனை தொகுதியிலுள்ள பட்டிருப்பு தொகுதியிலேயே தனித்தமிழ் தொகுதியாகும் இந்த தொகுதியில் அரசாங்கம் படுதோல்வி அடைந்துள்ளது என தெரிவித்தார்.
Monday, 19 May 2008
தமிழர் பிரச்சனைக்கு மாகாண ஆட்சிமுறை தீர்வாகாது -நாடாளுமன்ற உறுப்பினர் ‘அரியநேந்திரன்’
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment