யாழ்ப்பாண குடாநாட்டை ஆக்கிரமித்து வைத்திருக்கும் படையினர் மக்களை திசை திருப்பும் நோக்கோடு செயற்பட்டு வருகின்றனர்.
எனவே இவர்களின் செயற்பாடுகளுக்கு துணைபோக வேண்டாமென எல்லாளன் படை யாழ் குடாநாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிந்தித்து செயற்படுங்கள் யாழ்ப்பாண களியாட்டம் யாருக்கு?
என்ற தலைப்பில் எல்லாளன் படை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து வைத்திருக்கும் படைகளால் திறந்த வெளிச் சிறைச்சாலை யாக்கப்பட்டிருக்கும் குடாநாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களையும் மக்கள் மீதான படுகொலைகளையும் மூடி மறைக்கும் நோக்கோடும் குடாநாட்டில் மக்கள் எதுவித பிரச்சினைகளுமின்றி இருப்பதாகக் காட்டும் நோக்கோடும் மக்களை திசை திருப்பும் நோக்கோடும் படையினரும் பொலீசாரும் இணைந்து தேசத்துரோகி துரையப்பா விளையாட்டரங்கில் 24 மற்றும் 25ம் திகதிகளில் களியாட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு சில அரச உயரதிகாரிகளும் துணை போகின்றார்கள். எனவே இதனைப் புரிந்து கொண்டு குடாநாட்டு மக்கள், இளைஞர், யுவதிகளென செயற்படுமாறும் களியாட்டங்களை தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, 24 May 2008
களியாட்டங்களைத் தவிர்க்குமாறு குடாநாட்டில் எல்லாளன் படை துண்டுபிரசுரம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment