Thursday, 8 May 2008

மனித உரிமை மீறல்கள் ஆடைஏற்றுமதித்துறையை பாதித்துள்ளது- ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் அதிகரித்திருக்கும் மனித உரிமை மீறல்களை அரசாங்கம் கட்டுப்படுத்துவதற்குத் தவறியிருப்பதால் ஏற்றுமதி வரிச்சலுகை நீங்கி ஆடை ஏற்றுமதித்துறை பாதிக்கப்படக்கூடிய அபாயம் தோன்றியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போன்றன உன்னிப்பாக அவதானித்து வருவதாக லக்வனிதா அமைப்பு ஏற்பாடுசெய்திருந்த கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கியிருக்கும் ஏற்றுமதி வரிச்சலுகை நிறுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாக இருப்பதாகவும், இதனால் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்புக்களை இழக்கவேண்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தினாலே அன்றி ஏற்றுமதி வரிச்சலுகையை இழப்பதைத் தடுக்கமுடியாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.

No comments: