Sunday, 11 May 2008

கிழக்கின் முதலமைச்சர் பிள்ளாயான் எதிர்வரும் புதன் கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவி ஏற்கவுள்ளதாக தெரியவருகிறது.

கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக ரி.எம்.வி.பியின் உப தலைவாரான 32 வயதுடைய பிள்ளையான் என்ற சிவநேசகுமார் சந்திரகாந்தன் எதிர்வரும் புதன் கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவி ஏற்கவுள்ளதாக தெரியவருகிறது.

இதே தினத்தில் மாகாண அமைச்சர்களும் பதவி ஏற்கவுள்ளனர். அத்துடன் மாகாணத்தின் முதலாவது கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் மக்கள் தொகையில் 42.9 வீத தமிழர்களும், 31.6 வீத முஸ்லீம்களும், 24.9 வீத சிங்களவர்களும் வாழ்கின்றனர்.

இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் 36.7 வீத தமிழர்களும், 33.4 வீத சிங்களவர்களும், 29.3 வீத முஸ்லீம்களும் வாழ்வதுடன் மட்டக்களப்பில் 72 சத வீத தமிழர்களும், 23.9 வீத முஸ்லீம்களும், 3.4 வீத சிங்கவர்களும் வாழ்க்கின்றனர் இதனை தவிர அம்பாறை மாவட்டத்தில் 41.5 வீத முஸ்லீம்களும், 37.8 வீத சிங்களவர்களும், 20.4 வீத தமிழர்களும் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பெருபான்மையாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

2 comments:

ttpian said...

SIVALOGA PATHAVI?

Anonymous said...

The last chair to sit. The hell is waiting for him