யாழ்ப்பாணம், கொக்குவில் பிரதேசத்தில் நேற்றிரவு (மே.12) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொக்குவில் ஆடியபாதம் வீதியில் தனியார் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளர் ஒருவரே சுட்டப்பட்டுள்ளார். இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இரண்டு பேர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார். கொல்லப்பட்டவர் கொக்குவில் ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய பரமநாதன் மகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Tuesday, 13 May 2008
யாழ் கொக்குவிலில் ஒருவர் சுட்டப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment