Tuesday, 13 May 2008

கல்வியங்காட்டை சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை மனித உரிமைகள் ஆணைக்குழவில் சரணடைந்துள்ளார்.

தனக்கு உயிர் அச்சுறுத்தல் எனக்கோரி யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழவில் இன்று (மே.13) ஒருவர் சரணடைந்துள்ளார். கல்வியங்காட்டை சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே சரணடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் 2006 ஆம் ஆண்டு முதல் இதுவரை நூற்றுக்கணக்கானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இவர்களில் பலர், யாழ்ப்பாண சிறையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர், பலர் தமது சொந்த விருப்பின் பேரில் சிறையில் இருந்து வெளியேறியுள்ளனர். வெளியறியவர்களில் பலர் ஆயுததாரிகளால் கொல்லப்பட்டு பழிவாங்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: