Saturday, 24 May 2008

மனித படுகொலைகள் தொடர்பாக ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு சர்ச்சையில் --ஞாயிறு திவயின

மூதூரில் 17 தன்னார்வ தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவை ரத்து செய்வதற்கு அரசாங்கம் ஊடகங்களின் மூலம் சூழ்ச்சி செய்வதாகத் தெரியவருகிறது.

வெளிநாட்டில் உள்ள சில இலங்கைத் தூதுவர்களின் மூலம் பாதுகாப்பு தகவல்கள் கசிவதாக ஞாயிறு திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆணைக்குழுவினால் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி பெற்றுக் கொள்வது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை வெளிநாட்டு சக்திகளின் நிதியுதவியில் இயங்கும் ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் என ஜே.என்.பி. தலைவர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

உதலாகம ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைளை ஈடுபட்ட பகவதி குழுவினரின் செயற்பாடுகள் குறித்தும் அரசாங்கம் மோசமான ஊடக பிரசாரமொன்றை மேற்கொண்டது.


மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவம் மறுக்கப்பட்டுள்ளமையினால் மனித உரிமைகள் தொடர்பாக உதாசீனப் போக்கை கடைபிடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமைகள் பேரவையின் வாக்கெடுப்பு நடைபெறும் வரை அவதானத்துடன் செயலாற்றிய அரசாங்கம்ää வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தி நேசன் ஊடகவியலாளர் மீது மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மனித உரிமைகள் விவகாரங்கள் பற்றி ஆராய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

No comments: