Saturday, 24 May 2008

மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ் இலங்கைக்கு விஜயம்

உலகின் மிகப் பிரபலாமன மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரியவருகிறது.

2009ம் ஆண்டை இலங்கையின் தகவல் தொழில்நுட்ப ஆண்டாக இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக கரு ஜயசூரிய மற்றும் திஸ்ஸ விதாரண ஆகிய அமைச்சர்கள் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பில் கேட்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரியவருகிறது.

உலக எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில் காற்றாலைகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் மைக்ரோசெப்ட் நிறுவனம் அதிக அக்கறை காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: