யாழ்ப்பாணம் சங்கானை குளத்தடி வீதியைச் சேர்ந்த சிறீதரன் பிரகாஸ் (13 வயது) என்ற மாணவன் இருதய நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு கொழும்பில் உள்ள லேடி றிட்ஜ்வே வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்வதற்கு 5 இலட்சம் ரூபா செலவாகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வறுமைக் கோட்டின் கீழ் எந்தவித வருமானனம் இன்றி சமூர்த்தி நிவாரணம் மட்டும் பெற்று வாழ்க்கை நடத்தி வரும் இவரின் தந்தையாரால் இந்நிதியை செலுத்த முடியாத நிலை உள்ளது.
ஆகையால் இவரின் தந்தையாரான சிறீதரன் பரோபகாரர்களிடம் இருந்து பண உதவியை எதிர்பார்க்கிறார். பண உதவி செய்ய விரும்புவோர் பணத்தினை 0690 021 58277 115 என்ற கணக்கு இலக்கத்திற்கு செலான் வங்கிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.
Saturday, 24 May 2008
உதவி கோருகிறார்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment