கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களை ஒத்தி வைக்குமாறு கோரி புளொட் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. எதிர்வரும் 10ம் திகதி தேர்தல்களை நடத்துவதா அல்லது ஒத்தி வைப்பதா என்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் 8ம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்திற்காக புளொட் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் தினங்களை மாற்றுமாறும் புளொட் அமைப்பு இந்த மனுவில் கோரியிருந்தது.
எனினும், தேர்தல் ஆணையாளர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
Friday, 2 May 2008
கிழக்குத் தேர்தல்களை ஒத்தி வைக்குமாறு புளொட் கோரிக்கை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment