Friday, 2 May 2008

கிழக்கு மக்கள் வாக்களிக்குமாறு அச்சுறுத்தல் � நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் குற்றச்சாட்டு

அம்பாறை - மட்டக்களப்பு மக்கள் சிறீலங்கா அரச படைகளாலும் துணைப்படைப் பிள்ளையான் குழுவினாலும் அச்சுறுத்தப்பட்டு வருவதாகஇ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் 10ஆம் நாள் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமக்கு வாக்களிக்குமாறு இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருதாகஇ கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஐரோப்பிய தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

அச்சம் காரணமாக இது தொடர்பாக முறையிட முடியாத நிலையில் மக்கள் திணறி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று காலை 5:30 அளவில் அம்பாறை கல்முனை பிரதேசத்தை கூட்டாக சுற்றிவளைத்த சிறீலங்கா தரைப் படையினர் சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் காவல்துறையினர் பாண்டிருப்பு கடற்கரைக்கு மக்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

அழைத்துச் செல்லப்பட்ட மக்கள்இ தலையாட்டியின் முன்பாக நிறுத்தப்பட்டு இருவர் கைது செய்யப்பட்னர்.

இதனைத் தொடர்ந்து மக்களை அச்சுறுத்திய படையினர் அரசுக்கும் பிள்ளையான் குழுவிற்கும் வாக்களிக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
ஏனைய பிரதேச மக்கள் தமக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்த படையினர்இ கல்முனை மக்களும் அவ்வாறு ஆதரவளிக்க வேண்டுமெனக் கூறியிருக்கின்றனர்.

அரச பணியாளர்கள் தவிர ஏனைய அனைவரும் கைது செய்யப்பட்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் கல்முனை கார்மெல் பாத்திமா கல்லூரிக்குச் சென்ற படையினர் அங்குள்ள ஆசிரியர்களை அழைத்துச் சென்று அரசுக்கும் பிள்ளையான் குழுவிற்கும் வாக்களிக்க வேண்டும் என எச்சரித்தனர்.
அரச படைகள் மற்றும் பிள்ளையான் குழுவின் இவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் கேட்டுள்ளார்.

மட்டக்களப்பு உள்ளுராட்சி தேர்தல் மற்றும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் என்பவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

No comments: