நீர்முழ்கிக் கப்பல் தளத்தை சீனா ரகசியமாக அமைத்து வருவதாக லண்டனில் இருந்து வெளிவரும் "தி டெய்லி டெலிகிராப்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நீர்முழ்கிக் கப்பல் தளத்தை செயற்கைக்கோள் தெளிவாக படம்பிடித்து அனுப்பியுள்ளதாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தளத்தில் ஏவுகணைகள் மற்றும் போர்விமானங்கள் தாங்கிய கப்பல்களை நிறுத்தி வைக்கும் நோக்கில் அமைத்து வருகிறது.
சீனாவின் இந்த நடவடிக்கை பிற ஆசிய நாடுகளுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில அமைந்துள்ளது. குறிப்பாக தெற்கு சீனக் கடல் பகுதியில் தங்களது வலிமையை நிலை நிறுத்த முயலும் அமெரிக்காவுக்கு இது பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை என்றும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
Friday, 2 May 2008
அணு நீர்மூழ்கி கப்பல் தளம் அமைக்கிறது சீனா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment