Thursday, 22 May 2008

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு காதல் கடிதம் எழுதும் சங்கரியின் கூட்டணி அலுவலகம் திடிர் சோதனை!!!.

கொழும்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் இன்று (மே 22) இலங்கை நேரம் மாலை 4:30 மணியளவில் பொலிசாரின் தேடுதலுக்கு உள்ளானது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு காதல் கடிதம் எழுதும் கட்சியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கோ அல்லது அதன் முக்கிய உறுப்பினர்களுக்கோ அறிவிக்காது திடிரென பொலிசார் சோதணையில் இறங்கி உள்ளனர்.

எதற்காக சோதணையிடப்படுகிறது என்பதையும் அங்கு கடமையில் இருந்தவர்கிளிடம் பொலிசார் தெரிவிக்கவில்லை. சோதணையிடப்பட்ட போது கட்சியின் தலைவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு காதல் கடிதம் எழுதும் வீ ஆனந்தசங்கரி அங்கிருக்கவில்லை.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மேற்கொள்ளப்படும் இவ்வாறான சோதணைகளை வன்மையாகக் கண்டிப்பதாக கட்சியின் முக்கியஸ்தரான எஸ் அரவிந்தன் தெரிவித்தார்.

சோதணையில் ஈடுபட்ட பொலிசார் எவ்வித ஆவணங்களையோ பொருட்களையோ எடுக்கவில்லை என்றும் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஏன் இந்த திடீர் சொதணை இடம்பெற்றது தொடர்பாக தாங்கள் உயரதிகாரிகளிடம் தொடர்பு கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மேற்கொள்ளப்படும் இவ்வாறான சோதணைகளை வன்மையாகக் கண்டிப்பதாக கட்சியின் முக்கியஸ்தரான எஸ் அரவிந்தன் தெரிவித்தார்.


தமிழர் விடுதலைக் கூட்டணி அரசுடன் இணைந்து இயங்குகின்ற ஒரு அரசியல் கட்சி. அப்படி இருந்தும் அதன் அலுவலகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சோதணைக்கு உள்ளாகி உள்ளமை பல ஊகங்களை எழுப்பி உள்ளது.

No comments: