Thursday, 22 May 2008

மனித உரிமை பேரவையில் இருந்து இலங்கை வெளியேற்றப்பட்டமை ராஜபக்ஸ அரசாங்கம் பெற்ற தோல்வி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இருந்து இலங்கை வெளியேற்றப்பட்டமை ராஜபக்ஸ அரசாங்கம் பெற்ற தோல்வி எனவும் இது இலங்கை மக்கள் பெற்ற வெற்றி எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

ஆசிய வலயத்தில் 4 உறுப்பு நாடுகளை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் இலங்கை தெரிவுசெய்யப்படவில்லை.

இதன் மூலம் சர்வதேசம் இலங்கைக்கு ஒரு செய்தியை வழங்கியிருக்கிறது எனவும் இலங்கையில் உள்ள மனித உரிமைகளை பாதுகாக்கும் நிறுவனங்களை வலுப்படுத்துமாறு கூறுவதே அந்த செய்தி என்றும் லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றமுடியாது. அரசாங்கத்தின் இயலாமையின் பிரதிபலனே இதன் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலைமையின் கீழ் இலங்கைக்கு எதிர்காலத்தில் சர்வதேசம் மேலும் தடைகள் ஏற்படுத்தும் வாயப்புகள் இருப்பதாக லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.

ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் அரசாங்கம் கடைபிடித்த செயற்பாடுகளுக்கு அமைவாக இலங்கை மனித உரிமை பேரவையின் உறுப்புரிமையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை பாதுகாக்கும் தேவை குறித்து ஐக்கிய தேசிய கட்சி இரண்டு வருடங்களாக அரசாங்கத்திற்கு தெரிவித்து வந்த போதும், அரசாங்கம் இதனை பொருட்படுத்தவில்லை.

இலங்கை தொடர்பில் சர்வதேசம் மேற்கொண்டுள்ள இந்த தீர்மானம், ஆடைஏற்றுமதி வரிசலுகைகளிலும் அழுத்தங்களை ஏற்படுத்தலாம் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல கூறினார்.

source:குளோபல் தமிழ்செய்தி

No comments: