நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரி சலுகையில் வாகனங்களை இறக்குமதி செய்ய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் வாகனத்தை இறக்குமதி செய்த நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்தால் அந்த வாகனத்தை அவரது மனைவிக்கோ அல்லது அதிகாரம் அளிக்கப்படும் ஒருவருக்கோ வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சர் த.மு தசநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரன் ஆகியோர் வரிசலுகையில் இறக்குமதி செய்த வாகனங்கள் அவர்களது மனைவிமாருக்கு வழங்கப்படும்
என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அண்மை காலங்களில் உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களும் இவ்வாறு அவர்களது உறவினர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
source:குளோபல் தமிழ்செய்தி
Thursday, 22 May 2008
வரி சலுகையில் இறக்குமதி செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனங்கள் மரணத்தின் பின் உறவினர்களுக்கு சொந்தமாம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment