Thursday, 22 May 2008

பிள்ளையான் தலதா மாளிகை விஜயமும் பயங்கரவாதத்தின் வேறுபட்ட வரையறுப்பும்

பிள்ளையான் தலதா மாளிகைக்கு சென்று வணங்கியமை குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் முன்னாள் தலதா மாளிகையின் தியவடன நிலமே நெரஞ்சன் விஜேரட்ன போன்றோர், விமல் வீரவன்ஸ தலதா மாளிகைக்கு சென்றமை குறித்து ஏன் எதுவும் பேசுவதில்லை .

என மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பி உள்ளார். 1998ஆம் ஆண்டு தலதா மாளிகையை விடுதலைப்புலிகள் தாக்கும் முன்னர், 1989ஆம் ஆண்டு ஜே.வீ.பீயினர் தலதா மாளிகையை தாக்கியிருந்தனர் என்பதை கிழக்கு மாகாண முதலமைச்சரின்; தலதா மாளிகை விஜயம் குறித்து விமர்சிப்போர் மறக்க கூடாது

எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் அவரது கட்சி தொடர்பில் தமக்கு ஆயிரக்கணக்கான கொள்கை முரண்பாடுகள் உண்டு. ஜே.வீ.பீயினர் மற்றும் விடுதலைப்புலிகள் தலதா மாளிகை உட்பட மத வழிபாட்டு தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தாம் வன்மையாக எதிர்ப்பதாகவும், ஒரு தனிநபர் எந்த ஒரு தாக்குதலிலும் தனியாக பங்கெடுத்தார் என பேசுவது அர்த்தமற்றது எனவும் தெரிவித்தார்.

பயங்கரவாதம் தொடர்பில் சிங்களம் மற்றும் தமிழ் என இரண்டு விதமாக கருதும் இரட்டை நிலைப்பாடு குறித்து தமிழ் மக்கள் மாத்திரம் அல்ல சரியாக சிநதிக்கும் இந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வெறுப்பநை;திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட நபரை விட தாக்குதல் நடத்திய அமைப்பு முக்கியமானது. பிள்ளையானின் தலதா மாளிகை விஜயத்தை விமர்சிக்கும் முன்னாள் தியவடன நிலமே றெரஞ்சன் விஜேரட்ன உள்ளிட்டவர்கள் அண்மையில் விமல் வீரவன்ஸ தலைமையிலானவர்கள் தலதா மாளிகைக்கு சென்ற போது எங்கிருந்தனர்

என்பதை அறிய விரும்புவதாகவும் முன்னர் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு மன்னிப்பு கோருவதாக இல்லையா என்பதை தீர்மானிப்பது மாநாயக்க தேரர்களுக்கு பொறுப்பான விடயம் எனவும் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source:குளோபல் தமிழ்செய்தி

No comments: