Thursday, 22 May 2008

நேசன்பத்திரிகையின் பாதுகாப்பு செய்தியாளர் கேயித் நொயார் நேற்று கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டபின் விடுவிக்கப்பட்டுள்ளார்.



கொழும்பின் பிரபல ஆங்கில வார இதழான நேசன்பத்திரிகையின் பாதுகாப்பு செய்தியாளர் கேயித் நொயார் நேற்று கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டபின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து இன்று இரவு 10.30 அளவில் வீடுநோக்கிப் புறப்பட்டவர் வீடு போய் சேரவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அவருடைய வாகணம் அவரது வீட்டிற்கு அருகில் முன்புற விளக்குகளும் இயந்திரம் நிறுத்தப்படாமல் இருக்கவும் கண்டுபிடிக்கப்பட்டது.

நேசன் பத்திரிகையின் ஆசிரியர் இந்த சம்பவம் குறித்து தெஹிவளை காவற்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்;. இதனை அடுத்து இரவு வேளையில் காணால் போன கேயித் நொயாரின் உயிரைப் பாதுகாக்க ஊடகசுதந்திரத்திற்காக பாடுபடும் அனைத்து ஊடக நிறுவனங்களும் உடன் நடவடிக்கை எடுக்குமமாறும் இது குறித்து அரசாங்க மட்டத்தில் கடுமையான அழுத்தங்களை கொடுக்குமாறும் சுதந்திர ஊடக இயக்கம், அவசர அறிக்கை ஒன்றை விடுத்தது.

அழுத்தம் கொடுக்க வேண்டிய தரப்பினரின் விபரங்களையும் சுதந்திர ஊடக இயக்கம் அறிவித்தது. இந்த நிலையில் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் தாக்கப்பட்டபின் விடுவிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
source:குளோபல் தமிழ்செய்தி

No comments: