Wednesday, 7 May 2008

கிழக்கு மக்களின் நிலைப்பாடு குறித்து அறிந்து கொண்ட ஜனாதிபதி மிகவும் குழம்பிப் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும்; தேர்தல் குறித்து கிழக்கு மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் அரசாங்கத்தை குழப்பமடையச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஆய்வு பணிகளுக்காக ஆறு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

கிழக்கில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நிறைவடைந்தவுடன் 3 குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், மற்றைய 3 குழுக்கள் கடந்த வாரம் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது.

இந்த ஆய்வு முடிவுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இரகசியமாக கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

கிழக்கு மக்களின் நிலைப்பாடு குறித்து அறிந்து கொண்ட ஜனாதிபதி மிகவும் குழம்பிப் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொள்ளாது ஓலுவில் துறைமுக திறப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டதாகவும், 150 லட்ச ரூபா செலவில் செய்மதித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிழக்கு மக்களுக்கு விசேட உரையாற்றியதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மேலும், பாராளுமன்றத்தை திடீரென ஒத்தி வைப்பதற்கும் இந்த ஆய்வு முடிவுகளே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


சிங்கள, முஸ்லிம் மக்கள் மாத்திரமன்றி பெரும்பான்மை தமிழ் மக்களும் பிள்ளையான் வெற்றியடைந்தால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்துள்ளதாக இந்த ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எதிராக வாக்களிக்க பெரும்பான்மை மக்கள் தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.

ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட ஒவ்வொரு ஆய்வதிகாரிகளுக்கும் தலா 50,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: