பெரும்பாலான பத்திரிகைகள் வாசகர்களைவிட்டுவிலகி, விளம்பரதாரர்களை நோக்கிச் சென்றிருப்பதாக ஆசிய ஊடகவியல் கல்லூரியின் தலைவர் சஷி குமார் தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவிலுள்ள இளம் ஊடகவியலாளர்களுக்காக சர்வதேச ஊடகவியல் நிலையம் ஏற்பாடுசெய்திருந்த ‘ஊடகத்தின் சுதந்திரம் மற்றும் பொறுப்புணர்ச்சி’ எனும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்பொழுது பத்திரிகைகள் விளம்பரங்கள் மூலம் பெறப்படும் வருமானங்களிலேயே தங்கியிருப்பதாகவும், 20-30 வீதமான வருமானமே பத்திரிகைகளின் விநியோகங்கள்மூலம் பெற்றுக்கொள்ளப்படுவதாக சஷி குமார் குறிப்பிட்டார்.
“கடந்த காலங்களில் பத்திரிகை நிறுவனங்களில் விளம்பரப் பிரிவு, ஆசிரியர் பீடத்திலிருந்து தனியாக இயங்கிவந்தது. விளம்பரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர் பீடத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், தற்பொழுது நிலைமை முற்றாகமாறி விளம்பரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆசிரியரின் அறைக்குள்ளே நேரடியாகச் சென்றுவிடுகின்றனர்” என அவர் மேலும் கூறினார்.
சார்க் நாடுகளைச் சேர்ந்த 25 இளம் ஊடகவியலாளர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment