முப்பது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தொடர்ந்துவரும் மோதல்களால் பல்வேறு பிரச்சினைகளுக்கு இலங்கை மக்கள் முகம்கொடுத்துள்ளனர். இளம் பெண்களுக்கு வரன் தேடுவது அதில் ஒரு முக்கிய பிரச்சினையாக இடம்பிடித்துள்ளது.
இலங்கையிலிருந்து பல இளைஞர்கள் அச்சம் காரணமாக வெளியேறியிருப்பதால் இளம் பெண்களுக்கு வரன் தேடுவதில் சிக்கல் நிலை தோன்றியிருப்பதாக சென்னையிலிருந்து வெளியாகும் ‘ஈழ சுதந்திரம்’ எனும் மாதாந்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 1983ஆம் ஆண்டிலிருந்து பல இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். 30 வயதைத் தாண்டிய ஈழப்பெண்கள் பலர் இன்னமும் திருமணம் ஆகாதநிலையில் இருப்பதாக அந்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் தமிழ் இளைஞர்களுக்கு பெரும் கேள்வி இருப்பதால் பெரும்தொகைப் பணத்தை அவர்கள் சீதனமாகக் கோருவதாக அந்த சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைவிட, அழகு, மெல்லிய உடலமைப்பு, கல்வியறிவு, வேலை போன்றவற்றுக்கு முன்னரிமை கொடுத்தே புலம்பெயர்ந்துவாழும் இளைஞர்கள் பெண்களைத் தேடுவதாகவும் அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment