Friday, 2 May 2008

நாடுதழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள்: ஜே.வீ.பீ.--லக்பிம செய்தி

கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் ஜே.வீ.பீ. பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சமஸ்டி முறைமைகளை கிழித்தெறிந்து, இலங்கையின் பௌதீக ஒருமைப்பாட்டையும், இறைமையையும் உச்ச அளவில் கட்டிக்காக்குமாறு ஜே.வீ.பீ. அரசாங்கத்திற்கு அழுத்தங் கொடுக்க உள்ளதென லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாட்டு கொள்கைகளுக்கு அடிபணியாது பொருளாதாரத்தை வலுத்துமாறும் ஜே.வீ.பீ. அரசாங்கத்திற்கு அழுத்தங்கொடுக்க உள்ளது.

தேசியப் பிரச்சினை தொடர்பில் மஹிந்த சிந்தனையின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும், கிடைக்கப் பெற்ற மக்கள் ஆணையை அரசாங்கம் துஸ்பிரயோகம் செய்வதாகவும் ஜே.வீ.பீ.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இதனால் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்கள் முடிவடைந்தவுடன் நாடு தழுவிய ரீதியில் ஜே.வீ.பீ.யினால் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: