Friday, 2 May 2008

அடிப்படைவாத கட்சியை அமைக்கப் போவதில்லை - விமல் வீரவன்ச:

ஜே.வீ.பீ.யில் தற்போது காணப்படும் அடிப்படைவாத கொள்கைகளைப் போன்றல்லாது ஜனநாயகரீதியான மக்கள் நலன் மிக்க கொள்கைகளையுடைய கட்சியொன்று உருவாக்கப்படும் என ஜே.வீ.பீ.யின் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் புதிய கட்சி தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 10ம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சி ஜே.வீ.பீ.யின் நகலாக அமையாத போதிலும் தலைவர் ரோஹன விஜேவீரவின் அரசியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதாக உருப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய கட்சியின் நிறம், இலச்சிணை மற்றும் பெயர் என்பன தற்போது கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பட்ட அவர், தடிகளை கதவுகளுக்குப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டு பெலவத்த தலைமைக் காரியாலத்திற்கு வருமாறு விடுக்கப்படும் அழைப்புக்களை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

தாம் ஆரம்பிக்கவிருக்கும் புதிய கட்சி தொடர்பாக ஜே.வீ.பீ. தலைவர்கள் பீதியடைந்துள்ளமை அவர்களது கூற்றுக்களின் மூலம் தெளிவாக புலப்படுவதாக விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: