Saturday, 10 May 2008

லக்ஷ்மன் செனவிரட்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்னவின் வாகனத்தின் மீது கிழக்கு பிரதேசத்தில் இன்று மாலை துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் செனவிரட்ன, கொழும்பில் தமிழர்கள் கடத்திச் செல்லப்படுகின்றமை தொடர்பில் முன்னாள் வான் படை அதிகாரி கஜநாயக்கவுக்கு தொடர்பிருப்பதாக கூறியமையும் அதன் பின்னர் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: