விடுதலைப் புலிகளின் வான்படை கடந்த 27ஆம் திகதி ஐந்தாவது தாக்குதலை மேற் கொண்டதைத் தொடர்ந்து தென்னிலங்கையி லும் பாதுகாப்புத் தரப்பிலும், மீண்டும் வான் புலிகள் பற்றிய பீதி தொற்றிக் கொண்டிருக்கி றது. வான்புலிகளின் பலத்தை அழித்து விட்ட தாகவும், அவர்களால் இனிமேல் வன்னியில் கூடப் பறக்க முடியாது என்றும் அரசாங்கத் தரப்பு வீரப் பிரதாபங்களைச் செய்து கொண் டிருந்த நிலையில் தான் வான்புலிகள் மற் றொரு தாக்குதலை நடத்தி விட்டுச் சென்றிருக் கின்றனர்.
இதையடுத்து வான்புலிகள் பற்றிய அச்சம் அவர்கள் பற்றிய தகவல்களும் மீண்டும் அதிகளவில் வெளிவரத் தொடங்கியிருக்கின் றன. இந்தவகையில் கடந்தவாரம், புலிகள் இரணைமடுவில் உள்ள விமான ஓடு பாதையை கடந்த சில வாரங்களுக்குள் விஸ் த?த்திருப்பதாகப் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளிவந்திருக் கின்றன.
விமானப்படையின் ஆளில்லா வேவு விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங் களிலேயே இரணை மடுவில் உள்ள ஓடுபாதை யைப் புலிகள் விஸ்தரித்திருப்பது தெரியவந் ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2005 ஏப்ரல் 25ஆம் திகதி கொழும்பில் இராணுவத் தலை மையகத்துக்குள் வைத்து இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா மீது தற் கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, வடக்கில் புலிகளின் நிலைகள் மீதான விமானத் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இரணைமடுவில் உள்ள புலிகளின் விமான ஓடுபாதை மீதே விமானப்படை தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல்கள் 2006 தீவிரம் பெற்றன. 2007 ஆம் ஆண்டி லும் மிகமோசமான தாக்குதல்கள் நடத்தப் பட்டன. இந்த வருடத்தில் ?ன்னெப்போதும் இல்லாதளவுக்கு இந்தப் பிரதேசத்தில் விமா னத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இரணைமடு ஓடுபாதையைக் குறிவைத்து இந்த மூன்று வருட காலப்பகுதியில் நடத்தப்பட்டிருக்கும் விமானத் தாக்குதல்களைக் கணக்கிட்டால் அது இரட்டை இலக்கங்களைக் கடக்கின்ற நிலையை எட்டியிருக்கும் என்பது உண்மை.
ஒவ்வொரு விமானத் தாக்குதலின் பின்ன ரும் குறித்த இலக்கை வெற்றிகரமாகத் தாக்கி அழித்திருப்பதாக விமானப்படை தரப்பில் கூறப்படுவதும் வழக்கமாகிவிட்டது. விமானத் தாக்குதல்களின் பின்னர் ஆளில்லா வேவு விமானங்கள் எடுத்த படங்களில் ஓடுபாதை யில் பாரிய குழிகள் ஏற்பட்டிருந்ததைக் காண முடிந்ததாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன.
ஆனால் தொடர்ச்சியான விமானத் தாக்கு தல்களுக்குள்ளாகிவரும் இரணைமடு ஓடு பாதையைப் புலிகள் மேலும் விஸ்தரித்திருப்பதாக தற்போது கிடைத்திருப்பதாகக் கூறப் படும் ஆதாரங்கள் நிச்சயமாகப் படைத்தரப் புக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. தொடர்ந்து விமா னப்படை தாக்குதல் நடத்தி வருகின்ற, நன்கு அடையாளம் காணப்பட்ட ஓடுபாதையைப் புலிகள் மேலும் விஸ்தரித்திருக்கிறார்கள் என்றால் அதன் பின்னணியில் பாரிய திட்டங்கள் ஏதும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவது இயல்பு.
2005ஆம் ஆண்டில் இரணைமடு ஓடுபாதை யின் நீளம் 1500 மீற்றர் தொடக்கம் 2000 மீற்றர் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட் டிருந்தது. ஆனால் தற்போது மேலும் விஸ் த?க்கப்பட்டிருக்குமானால் நிச்சயமாக 2000 மீற்றரை விடவும் அதிகமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. புலிகளிடம் 5?தல் 10 வரையான ஙூடூடிண ஙூ 143 ரக ஒற்றை இயந்திர இலகு விமானங்களும், இரண்டு இலகு ரக ஹெலிகொப்டர் களுமே இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரி வித்தன.
புலிகள் z- 143 விமானங்களைக் கொண்டே இதுவரை ஐந்து தாக்குதல்களையும் நடத்தியிருக்கின்றனர். இந்த விமானங்களைக் கையாள்வதற்கோ தாக்குதலில் ஈடுபடுத்து வதற்கோ புலிகளுக்கு 1200 மீற்றர் நீளமான ஓடுபாதையே அதிகமானதாகும். இந்த விமா னங்கள் 170 ?தல் 350 மீற்றர் வரை தரையில் ஓடி, 450 முதல் 640 மீற்றர் தூரத்துக்குட்பட்ட பிரதேசத்தில் இருந்து மேற்கிளம்பி விடும்.
ஆக மொத்தம் மேற்கிளம்புவதற்கு, குறைந்தது 620 மீற்றர் முதல் ஆகக் கூடியது 990 மீற்றர் வரையான ஓடு பாதையே போதுமானதாகும்.
இது போன்றே தரையிறங்குவதற்கும் குறைந்தது 590 மீற்றர், கூடியது 765 மீற்றரும், தரையிறக்க ஓட்டத்துக்கு குறைந்தது 305 மீற்றரும் கூடியது 380 மீற்றர் நீளமானதுமான ஓடு பாதையுமே தேவைப்படும்.
ஆக, தரையிறக் கத்துக்கு மொத்தம் குறைந்தது 895 மீற்றர், கூடியது 1045 மீற்றர் நீளமான ஓடுபாதையே தேவையாகும். ஆனால், புலிகள் 2005< ஆம் ஆண்டிலேயே 1500 மீற்றருக்கும் அதிகமான நீளமுடைய ஓடுபாதையை அமைத்திருந்தனர்.
இதன் காரணமாகவும், ஆளில்லா வேவு விமானம் ஒன்றினால் பிடிக்கப்பட்ட படத்தினாலும், புலிகளிடம் ஹேர்குலிஸ் ரகத்தைச் சேர்ந்த சரக்கு விமானம் இருக்கலாம் என்றும் சந்தேகங்கள் நிலவின. பின்னர் ஒரு கட்டத்தில் புலிகள் இரணைமடு ஓடுபாதையில் நிறுத்தியி ருந்தது வெறும் "பொம்மை' விமானங்கள் தான் என்று பாதுகாப்புத் தரப்பு கூறியது.
தற்போது இரணைமடு ஓடுபாதை விஸ்தரிக் கப்பட்டது உண்மையாக இருக்குமேயானால் அதற்கான காரணம் நிச்சயம் வலுவானதா கவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தற்போது புலிகள் இரணைமடுவைத் தவிர முல்லைத்தீவுப் பிரதேசத்திலும் விமான ஓடு பாதைகளை நிறுவியிருப்பதாக சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. மணலாறில் கடந்த மாதம் தாக்குதலுக்காகச் சென்ற விமானங்கள் முள் ளியவளையில் இருந்தே புறப்பட்டுச் சென்றதா கவும் பின்னர் மீளவும் அங்கேயே தரையிறங் கியதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை சம நேரத்தில் இரணைமடு ஓடுபாதையில் இருந்து இலகு ரக ஹெலிகொப்டர் ஒன்றும் பறப்பில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இரணைமடுவில் பறந்த புலிகளின் ஹெலி, படையினரின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலோ அல்லது புலிகளின் விமானங்க ளுக்கு சமிக்ஞை கொடுக்கவோ பறப்பில் ஈடு பட்டிருக்கலாம் என்று விமானப்படை சந்தே கம் வெளியிட்டிருந்தது. இந்தநிலையில் விமா னப்படையின் தொடர் தாக்குதலுக்குள்ளாகும் ஓடுபாதையைத் தொடர்ந்து செப்பனிட்டு மேலும் விஸ்தரித்து வருகிறார்கள் என்றால் அவர்கள் பெரியளவிலான வான் தாக்குதலுக் குத் தயாராகிறார்கள் என்றே அர்த்தம் கொள் ளப்படுகிறது.
தற்போது புலிகள் தாக்குதலுக்குப் பயன்ப டுத்தும் zilin-143 விமானங்களை விடவும் பெரியதான விமானங்களை தாக்குதலுக்கா கவோ அல்லது வேறு தேவைகளுக்காகவோ பயன்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உரு வாகியிருக்கிறது.
தற்போது பயன்படுத்தும் விமானங்களை அவர்கள் ஓடுபாதையொன்றில் தான் தரையி றக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
குறிப்பிட்ட நீள?டைய தார் வீதியில் கூட அதைச் செய்யமுடியும்.
அப்படிப்பட்ட நிலையில் புலிகள் தமது விமான ஓடுபாதையை ஒன்றுக்கும் அதிகமான இடங்களில் நிர்மாணிக்க ?னைவதும் விமா னத் தாக்குதலால் சேதம் ஏற்பட்டதும் அவற் றைத் திருத்தியமைப்பதும் அவர்கள் பாரிய திட்டம் ஒன்றுக்கான தயார்படுத்தலில் ஈடுபட் டிருக்கிறார்கள் என்பதையே உணர்த்துகிறது.
அதேவேளை ஏற்கனவே இனங்காணப்பட்ட ஓடுபாதை தாக்குதலுக்குள்ளாகும் எனத் தெ?ந் திருந்தும் புலிகள் அந்த ஓடுபாதையைத் தொடர்ந்து விஸ்த?த்து வருவதானது அவர்கள் காடுகளுக்குள் மறைவாகப் பேணிவரும் ஓடுபாதைகளின் மீது விமானப் படையின் கவ னம் திரும்பாதிருக்கச் செய்யப்படும் ஏமாற்று உத்தியாகவும் இருக்கலாம் என்றும் சந்தேகங் கள் இருக்கவே செய்கின்றன. ஏற்கனவே புலி கள் இரணைமடு ஓடுபாதையில் பொம்மை விமானங்களை நிறுத்தி வைத்து விமானப் படையை ஏமாற்றியிருந்ததும் குறிப்பிடத்தக் கது.
எவ்வாறாயினும் புலிகளின் விமானப்படை யானது ஐந்தாவது தாக்குதலின் பின்னரும் பாதுகாப்பாக தளம் திரும்பியிருப்பதானது வான்படையின் முறியடிப்புத்திறன் தொடர் பாக தென்னிலங்கை வாசிகளிடத்தில் ஏற்படுத் தப்பட்டிருந்த நம்பிக்கையைச் சிதைத்து விட்டி ருக்கிறது. கட்டுநாயக்கவில் இருந்து விமானப் படையின் மிக்27, கிபிர், ஊ7எண் போன்ற போர் விமானங்களால் 1நிமிடம் 57 செக்கன் களில் வன்னி வான்பரப்பை அடைந்து விட முடியும்.
ஆனால் அரை மணிநேரம் வரை பறப்பில் ஈடுபட்டிருந்த புலிகளின் விமானங்களை ஆயத்தமின்மை, முறியடிப்புத்திறன் குறை பாடுகளால் விமானப்படையால் நெருங்கக் கூட முடியவில்லை. புலிகளும் இந்தத் தாக்கு தலை ஒரு பரீட்சார்த்த தாக்குதலாக நடத்தி யிருக்கலாம் என்றே கருதப்படுகிறது.
இந்தநிலையில் இரணைமடு ஓடுபாதை விஸ்தரிப்பு மற்றும் விமானப்படையின் முறி யடிப்புத் திறனை பரீட்சிக்கும் நோக்கில் புலி கள் மணலாறில் தாக்குதலை நடத்தியமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது புலிகள் புதிய விமானங்கள் எதையும் களம் இறக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Saturday, 10 May 2008
புலிகள் புதியவகை விமானங்களை இறக்க திட்டமிட்டுள்ளார்களா???--வீரகேசரி சுபத்திரா
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment