விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்க, சர்வதேச சமூ கம் உதவ வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நியுயோர்க்கில் கடந்தவாரம் நடைபெற்ற ஐ.நா பாதுகாப் புச்சபைக் கூட்டத்தில் பேசிய ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பிரசாத் காரி யவசம் இந்த வேண்டுகோளை விடுத் திருந்தார்.
வெளிநாடுகளில் இருந்து புலிகளுக்குக் கிடைத்து வரும் நிதியுதவிகளைத் தடுப்பது மற்றும் வெளிநாடுகளில் இருந்து புலிகள் ஆயு தங்கள் கொள்வனவு செய்வதைத் தடுப்பது போன்ற இரண்டு நோக்கங்களின் அடிப்படை யிலேயே அரசாங்கம் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கிறது.
அமெ?க்கா, கனடா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளில் புலிகள் இயக் கம் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்து வருகின்ற போதும் மேற்படி நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடத்தில் இருந் தும் வேறு வர்த்தகத் தொடர்புகள் மூலம் புலிகளுக்கு நிதி வருமானங்கள் கிடைத்து வரு வதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரி விக்கின் றன. இந்த நிதி வருவாயைத் தடுப்பதன் மூலம் புலிகளின் பொருளாதார பலத்தைச் சிதைத்து விடமுடியும் என்று அரசாங்கம் நம்புகிறது.
இது தொடர்பாக மேற்படி நாடுகளுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களின் அடிப் படையில் புலிகளின் பிரதிநிதிகள், நிதி சேக?ப் பாளர்கள் போன்றோர் அந்தந்த நாடுகளின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டும் உள்ள னர். பலர் விடுதலையாகியும் இருக்கின்றனர்.
ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து புலிக ளுக்கு நிதி தொடர்ந்தும் கிடைத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்க?ம் புலிகளைத் தடை செய்துள்ள நாடுகளும் பெரும் பிரயத்தனங் களை எடுத்து வருகின்ற போதும் அந்த ?யற் சிகளுக்குப் பூரண வெற்றி கிட்டவில்லை.
வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி யைக் கொண்டே புலிகள் இயக்கம் ஆயுதச் சந்தைகளில் இருந்து நவீன ஆயுதங்கள், வெடி பொருட்களைக் கொள்வனவு செய்து வன்னிக் கள?னைக்கு கொண்டு செல்கிறது. புலிகளின் ஆயுத விநியோகத்தைத் தடை செய்ய இலங் கைக் கடற்படை, இந்தியக் கடற்படை மற்றும் வேறு சில நாடுகளின் புலனாய்வு அமைப்புக்க ளின் உதவியுடன் மேற்கொண்ட ?யற்சிகளில் தற்போது பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
2006/07ம் ஆண்டுகளில் புலிகளின் ஏழு ஆயுதக் கப்பல்களை மூழ்கடித்து புலிகளின் கடல்வழி விநியோக கப்பல்களை முற்றாகவே அழித்து விட்டதாக கடற்படை உரிமை கோரி யிருந்தது. புலிகளின் ஆயுதக் கப்பல்களை சுமாத்ராவுக்கு அருகேவரை சென்று தாக்கியழித்ததன் மூலம், இலங்கைக் கடற்படை "நீல க்கடல் கடற்படை' (BLUE WATER NAVY) என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளதாகவும் அரசாங்கம் கூறியிருந்தது.
புலிகளின் கடல்வழி விநியோகங்களை முற் றாகத் தடுப்பதன் மூலம், அவர்களின் போரிடும் ஆற்றலை வெகுவாகக் குறைத்துவிடலாம் என்று படைத்தரப்பு நம்பியிருந்தது.
அந்தவகையில் தான் புலிகளின் அனைத்துக் கப்பல்களையும் அழித்து விட்டதாக உரிமை கோரிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட புலிகளிடம் தற் போதுள்ள ஆயுதங்கள் மூன்று மாதங்களுக்கே போதுமானதாக இருக்கும்.
அதன் பிறகு அவர் கள் ஆயுதங்கள் கிடைக்காமல் அழிந்து போவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்து எட்டு மாதங் களுக்கு மேலாகிவிட்டது.
ஆனால், புலிகளின் போரிடும் திறனும் (FIGHTING CAPACITY) அவர்களின் சூட்டு வலுவும் (FIRING CAPACITY) அண்மையில் அதிகளவில் உயர்ந்திருப்பதாக இராணுவத்தரப்பு கூறியுள்ளது. இந்தநிலையில் தான் புலிகள் கடந்த இரண்டு மாதங்களுக்குள் மூன்று கப்பல்களில் ஆயுதங்களைத் தருவித் திருக்கிறார்கள் என்ற தகவலும் வெளிவந்திருக் கிறது.
முல்லைத்தீவுக்கு வடக்கே இருக்கின்ற கடற் புலிகளின் தளங்களினூடாக இந்த ஆயுதங்கள் தரையிறக்கப்பட்டதாகவும், சிறிய ட்ரோலர்கள் மூலம் கப்பல்களில் இருந்து ஆயுதங்கள் கொண்டு வந்து இறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவல்கள் நூறு வீதம் சரியாக இருந்திருக்குமானால் இலங்கைக் கடற் படையின் கண்காணிப்பு, புலனாய்வுத் திறன் கள் குறித்து கேள்வி எழுகிறது.
புலிகள் மூன்று கப்பல்களில் ஆயுதங்களைக் கொண்டு வந்து இறக்கிய தகவல் அரச புலனாய்வுத் துறைகளுக்கு மிக மிகத் தாமதமா கவே கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெப் ரவரி முற்பகுதியிலும் மார்ச் நடுப்பகுதியிலும் தான் இந்த ஆயுதங்கள் தரையிறக்கப்பட்டிருக் கின்ற போதும், ஒன்றரை மாதங்கள் கழித்தே இது பற்றிய அறிக்கை பாதுகாப்புச் சபைக்கு வழங்கப்பட்டிருப்பது புலனாய்வு அமைப்புக ளின் செயற்பாட்டு வேகத்தை வெளிப்படுத் துகிறது.
அதுமட்டுமன்றி வடக்கில் இருந்து கிழக் கிற்கு கடற்புலிகள் செல்ல முடியாமல், கடற் படை வேலி போட் டுத்தடுத்து வைத்திருப் பதாகக் கூறிக் கொள்கின்ற போதும் நாயாறு கடலடித் தாக்குதலை அடுத்து புலிகளின் மட் டக்களப்பு மாவட்ட சிறப்புத் தளபதி கீர்த்தி உள்ளிட்ட ஜெயந்தன் படையணிப் போராளி களை கடற்புலிகள் திருகோணமலை வடக்கில் தரையிறக்கியுள்ளளனர் என்பது உறுதியாகி யுள்ளது.
புலிகளின் நகர்வைத் தடுத்து நிறுத்தி முறிய டித்து விட்டதாக கடற்படை கூறினாலும் கடற்பு லிகள் வடக்கில் இருந்து கிழக்கிற்கான தமது போக்குவரத்து மற்றும் விநியோகங்களைத் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள் என்பதற்கு திருமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிகரித்திருக்கும் புலிகளின் தாக்குதல்களே சாட்சி பகர்கின்றன.
அதுபோன்று தான் கடற்புலிகள் கடல்வழி யாகப் புலிகளுக்கான ஆயுத வழங்கல்களை யும் செய்து வரு கின்றனர் என்பது உறுதியாகி யிருக்கிறது.
இந்தியக் கடற்படை, இந்தோனேசியா, கம் போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளின் புல னாய்வுத்துறைகளுடன் நெருக்கமான உறவு களை ஏற்படுத்தி புலிகளின் ஆயுதக் கப்பல்க ளின் நடமாட்டம் பற்றிய தகவல்களைச் சேகரித்து அவற்றை அழிப்பதற்கு இலங்கை அர சாங்கம் விரித்திருந்த வலையை அறுத்துக் கொண்டுதான் புலிகள் ஆயுதங்களைத் தரையி றக்கியிருக்கின்றனர். ஒன்று மட்டுமல்ல, மூன்று கப்பல்களில் இருந்து ஆயுதங்கள் தரையிறக் கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல்கள், இலங்கை அரசு மேற் படி நாடுகளுடன் ஏற் படுத்திக் கொண்ட பாதுகாப்பு தகவல் பரி மாற்ற உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர் பர்மிய கப்பல் ஒன்று சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் சென்று கொண்டிருந்தபோது பழுதுபட்டு முல்லைத்தீவுக் கடற்பகுதியில் வைத்து கடற் படையால் மீட்கப்பட்டது. முல்லைத்தீவுக் கரைக்கு அண்மையில் வரும்வரை அந்த சந் தேகத்துக்கிடமான கப்பல் குறித்து இந்தியக் கடற்படை எச்சரிக்கவேயில்லை. இந்தியக் கடற்படை க்கு தெரியாமல் அந்தக் கப்பல் முல்லைத்தீவுக்கு நெருக்கமாகச் சென்றதா அல்லது இந்தியா அந்தத் தகவலைப் பரிமாறத் தவறியதா என்ற சந்தேகமும் உள்ளது.
பர்மியக் கப்பல் பற்றிய தகவலை தமக்கு நெருக்கமான நாடுகள் பரிமாறிக் கொள்ளத் தவறிய போதே இலங்கை அரசுக்கு புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தம்மையும் மீறி வரக் கூடும் என்பது தெரிந்திருந்தது. தற்போது அது நிரூபணமாகியிருக்கிறது. கடற்படையால் முற்று முழுதாக புலிகளின் கடல் வழி ஆயுத விநியோகத்தைத் தடுத்து விட முடியாது என் பதை உணர்ந்துள்ள நிலையில் தான் சர்வதேசமுகத்தின் முன்னிலையில் புலிகளுக்கு ஆயு தங்கள் கிடைப்பதை தடுக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
Saturday, 10 May 2008
கடற்புலிகளின் ஆயுதக்கடத்தலை தடுப்பத்ற்கு திணறும் சிங்கள கடற்படை
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
entire tamil community to tell the EU+western countries not to supply arms to srilankan army:
Onething is clear,Let srilanka join with rogue nations-it will not bring down our interest+involvement:Tigers will march towards victory:TAMILEELAM is being formed!
We disapora Tamils should not stop helping Tigers. What ever the restrctions and blockade these western countries bring on us it will not stop us. Helping the Tigers the only way to win our freedom strugle and our future generation can live with security in peace and harmony.
THE JEWS WERE EXTERMINATED BY HITLER IN GAS CHAMBERS DURING WORLD WAR 2, AND TODAY THE TAMILS BEEN SYSTAMATICALLY EXTERMINATED IN SRI LANKA BY ANOTHER HITLER, NAMED MAHINDA RAJAPAKSE WITH THE HELP OF THE EU AND WESTERN NATIONS.
Post a Comment