தேசிய பிரச்சினைக்கு போரினால் தீர்வுகாண முயன்ற ராஜபக்ஸ அரசாங்கம் விடுதலைப்புலிகளை மீண்டும் சமாதான பேச்சு மேசைக்கு அழைத்து வர சர்வதேச பின்னணியுடனான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கையின் அரசாங்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போதும், இடைநடுவில் பேச்சுவார்த்தையில் இருந்து விலகி சென்றுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுமானால் தமிழீழ விடுதலைப்புலிகளை பேச்சுவார்த்தை மேசையில் தொடர்ந்திருக்க வைப்பது சர்வதேசத்தின் பொறுப்பு என் நிபந்தனையை இலங்கை அரசாங்கம் முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை பிரதிநிதிகளின் தலைவராக இருந்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் சமாதான பேச்சுவார்த்தை பிரதிநிகளுக்கு பதிலாக, இம்முறை ஜனாதிபதி அமைச்சர் ராஜித சேனாரட்னவையே அரசாங்கத்தின் பிரதிநிதியாக தெரிவு செய்து சர்வதேசத்திற்கு சமாதான பிரதிநியாக அனுப்பி வைக்கவுள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரட்ன அண்மையில் நோர்வே சென்றிருந்ததுடன் நோர்வேயின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். சமாதான பேச்சுவார்த்தைகளில் சர்வதேசத்தின் உதவிகளை பெற்றும் கொள்ளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தீர்மானத்திற்கு அமையவே இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
நோர்வே விஜயம் தொடர்பில் சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ராஜித, தனது நோர்வே விஜயத்தின் போது, நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொலஹெய்ம், சமாதான தூதுவர் யோன் ஹசன்சன் பவர், இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஜோன்வெஸ்பேர்க் மற்றும் அந்த நாட்டின் எதிர்ககட்சியான புரோக்ரஸ் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்ததுடன், நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார அதிகாரி ரொக்சி, மற்றும் இலங்கை விவகாரங்களுக்கு பொறுப்பான ஹாம் ஆகிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டார்.
போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்திய ரணில் விக்கிரமசிங்க ஜனாதபதி தேர்தலில் தோற்க்கப்பட்டார்.
பேச்சுவார்த்தை தொடர்பான தேவை குறித்து கருதாத ஜனாதிபதி டி.பி விஜேதுங்க தப்பித்தமை, மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தப்பித்துள்ளமை தொடர்பிலான கருத்துக்களை தாம் அவர்களுடன் பகிர்ந்து கொண்டதாக ராஜித குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் தம்மை பலப்படுத்தி கொண்டதுடன் மீண்டும் போர் முனைப்புகளை ஆரம்பித்தனர் என்பதை தான் சுட்டிக்காட்டியதாகவும் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் போர் நிறுத்த காலத்திலேயே பலம் அடைந்தனர் என்பது அந்த அமைப்பின் உறுப்பினர்களால் சர்வதேச ஊடகம் ஒன்றில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், படையினரும், அரசாங்கமும், நோர்வே தரப்பினரும் சமாதானத்திற்காக நேர்மையாக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பின்னணியின் அடிப்படையிலேயே தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ புலிகள் பேச்சுவார்ததை மேசைக்கு வருவதானால் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்., இந்த நிலையில் மீண்டும் பேச்வார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமானால் விடுதலைப்புலிகள் இறுதி தீர்வு வரை பேச்சுவார்த்தை மேசையில் தொடர்ந்திருக்க வைத்திருப்பது தொடர்பில் நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா என்பன உறுதிமொழியை வழங்கினால், இது குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்து, அமைச்சரவைக்கு யோசனை ஒன்றை முன்வைத்து, அரசாங்கம் சார்பில் தான் சமாதான முனைப்புகளை மேற்கொள்ள தயார் எனவும் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த உறுதிமொழி வழங்கப்படுமானால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் இருந்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த இணக்கத்தை பெற்றுக்கொள்வது தனது பொறுப்பு எனவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன நோர்வே தரப்பினரிடம் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளத்தில் தெரிவித்துள்ளாh.
Friday, 2 May 2008
விடுதலைப்புலிகளை மீண்டும் சமாதான பேச்சு மேசைக்கு அழைத்து வர சர்வதேச பின்னணியுடனான முயற்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment