Friday, 2 May 2008

கிழக்கு தேர்தல் மோதல்கள் வலுப்பெறுகிறது:

மட்டக்களப்பு செங்கலடிச்சந்தியில் நேற்று (01-05) இரவு இரு தமிழ் குழுக்களிடையே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது அப்பகுதியை பெரும் பரபரப்புக்குள்ளாக்கியதாக மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 9.40 மஅளவில்; கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் ஆயுத் ஏந்திய தமிழ்க் கட்சி உறுப்பினர்கள் செங்கலடிச் சந்தியில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது அவ்விடத்திற்கு இரு மோட்டார் சைக்கிளில் சென்ற மற்றுமொரு ஆயுதம் தாங்கிய அரசியற் குழு உறுப்பினர்கள் கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அப்பகுதியிலிருந்த படையினரும் இரு ஆயுதக்குழுக்களின் உறுப்பினர்களும,; சுமார் ஒரு மணிநேரம் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் கடும் பதட்டம் நிலவியதாக கூறப்படுகிறது. சேதவிபரங்கள் வெளியாகவில்லை.

No comments: