Monday, 19 May 2008

நீதவான்களின் சம்பள அதிகரிப்பு போர்வையில் அமைச்சர்களது ஊதிய உயர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது

நீதவான்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கும் அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

அரசியல் சாசனத்தின் 68ம் சரத்தின் அடிப்படையில் நீதவான்களதும், அமைச்சர்களதும் சம்பளங்கள் ஒரே தரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

பிரதமரின் சம்பளம் பிரதம நீதியரசரின் சம்பளத்திற்கும், சபாநாயகரின் சம்பளம் சட்ட மா அதிபரின் சம்பளத்திற்கும் சமப்படுத்தப்பட்டது.

அமைச்சரவை சாரா மற்றும் அமைச்சரவை அமைச்சர்களின் சம்பளம் உயர் நீதிமன்ற நீதவான்களின் சம்பளத்திற்கு சமப்படுத்தப்பட்டது.

No comments: