வரவு செலவு திட்ட விவாதத்தின் போது அரசுதரப்பில் இருந்து எதிர்கட்சி தரப்பு ஆசனத்தில் அமர்ந்து கொண்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சிறீலங்கா சுதந்திரகட்சி தயாராகி வருகிறது
சிறீலங்கா சுதந்திரகட்சி உறுப்பினராகவும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவேளையில் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை எனவும் ஆளும்கட்சியால் சமர்பிக்கப்பட்ட சட்டமூலத்தை நிறைவேற்றும் அரசாங்கத்தின் முயற்சிக்கு மாறாக செயற்பட்டதாகவும் இவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் சிறீலங்கா சுதந்திரகட்சி தகவல் தெரிவிக்கின்றன
சிறீலங்கா சுதந்திரகட்சியின் செயலாளர் நாயகமான அமைச்சர் மைத்திரபால சிறிசேன அடுத்தவாரம் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை கைளிப்பார் என தெரிகிறது இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெறவில்லை.
ஒழுக்காற்று விசாரணைக்குழுவின் தலைவர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அந்த ஒழுக்காற்று விசாரணைகள் காலவரையரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
Monday, 26 May 2008
விஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment