யாழ். நகருக்கு அண்மையில் உள்ள நாவாந்துறையில் ஊடகவியலாளர் ஒருவரும் கணினி தொழில்நுட்பப் பணியாளர் ஒருவரும் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து ஒளிபரப்புச் சேவையை நடத்தும் மகாராஜா நிறுவனத்தின் யாழ். நிருபரான பி.தேவகுமார் (வயது 34), தகவல் தெழில்நுட்பப் பூங்காவில் கணினி தொழிலுட்பவியலாளாராகப் பணியாற்றும் மகேந்திரன் வரதன் (வயது 26) ஆகியோரே வெட்டிக்கொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இவர்கள் இருவரும் பணி முடிந்து உந்துருளியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது நாவாந்துறை வெளிப்பகுதியில் இன்று புதன்கிழமை மாலை 4:00 மணியளவில் துணை இராணுவக்குழுவினர் இக்கொடூரச் செயலை செய்துள்ளனர்.
இவர்கள் இருவரினதும் உடலில் கடுமையான வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் வட்டுக்கோட்டை மாவடியைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் கூறப்படுகின்றது.
இருவரினதும் உடலங்கள் யாழ். மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
1 comment:
time will come-culprits will be punished!
Post a Comment