சர்வதேச மனிதஉரிமைச் சங்க அங்கத்துவத்தை இலங்கை இழந்துள்ளது.
இந்நிகழ்வானது, மனித உரிமை வாதிகளுக்கு திருப்தியான விடயமாக இருந்தாலும் தமிழ் பேசும் மக்களின் சீரழிந்த அவல வாழ் வினை இவ்விவகாரம் தலைகீழாக மாற்றிவிடப் போவதில்லை. இது குறித்து சில விளக்கங்களை சென்ற வார சமகால அரசியல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். திரும்பவும் அதனை மீட்டிப் பார்ப்பது சற்று பொருத்தமாக இத்தருணத்தில் அமையலாம்.
அதாவது ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகத்தை எவ்வகையிலாவது நிறுவிவிட முனையும் மேற்குலகம், ஜீ.எஸ்.பீ. பிளஸ் என்கிற ஆடை ஏற்றுமதி சலுகை (கோட்டா) ஊடாக அதனைச் சாதிக்க முயன்றால் ஆசியப் பெரும் வல்லரசான சீனாவின் பக்கம், முழுமையாகச் சாயும் நிர்ப்பந்தம் இலங்கைக்கு ஏற்படலாம்.
இது குறித்த கவலை மேற்குலகிற்குஉண்டென்பதைக் கவனத்தில் கொண்டால் இவ்வகையான பாரிய அழுத்தங்கள், வழமை போன்று கைவிடப்படும் வாய்ப்புகள் அதிகமுண்டு.
இவ்வழுத்தம் நிறைவேற்றப்பட்டால் இலட்சக்கணக்கான மக்கள் தமது வருவாயை இழந்து மிக இறுக்கமான நிலைக்குள் தள்ளப்படுவார்கள்.
அரசாங்கத்திற்குப் பாரிய அரசியல் நெருக்கடிகளை இதன் எதிர்விளைவுகள் உருவாக்கும்.
ஆகவே இதற்கு மாற்றீடாக, ஐ.நா. மனித உ?மைச் சபையிலிருந்து இலங்கையை நீக்குவதன் மூலம் மென் அழுத்தங்களை அதன் மீது பிரயோகித்து தொடர்ந்தும் ஒருவித உறவினைப் பேண மேற்குலகம் விரும்பலாம்.
மேற்குறிப்பிடப்பட்ட பார்வையின் முதற் பாகம் நடந்தேறிவிட்டது. சபையில் அங்கத்துவம் பெற முடியாதவாறு இலங்கையைத் தடுத்த சக்திகள் குறித்த விவாதங்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமுள்ளன.
ஆனாலும் இவ் விவகாரத்தில் பின் புலத்திலுள்ள சில நகர்வுகள் பற்றியும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நோபல் பரிசு பெற்ற தனி மனிதர்கள் வெளியிட்ட கருத்துக்களின் தாக்கத்தினால் இலங்கை அங்கத்துவத்தை இழந்ததாக பெரும்பான்மையானோர் கருதுகின்றனர்.
இவர்களின் கண்டனங்கள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தாலும், பூகோள அரசியலில் ஏற்பட்டு வரும் சந்தைப் பங்கிடுதல் மாற்றங்களும் பிராந்திய ஏகபோக நிலை நிறுத்தல்களும் பெரும் பங்கினை வகித்துள்ளதென்பதே உண்மை நிலையாகும்.
தென்னாபிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டூ, முன்னாள் அமெ?க்க அதிபர் ஜிம்மி காட்டர் மற்றும் ஆர்ஜன்டீனா நோபல் பரிசாளர் அடொல்வோ பெரெஸ் எஸ்கியூவெல் போன்றோர் மிகக் கடுமையான விமர்சனத்தை இலங்கை அரசாங்கத்தின் மீது அண்மையில் சுமத்தியிருந்தார்கள்.
1970, 1980 களில் லத்தீன் அமெரிக்க நாட்டு அரசுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட அசிங்கமான யுத்தங்களின் ஒத்த தன்மையை தற்போதைய இலங்கை அரசாங்கம் கொண்டிருப்பதாக அடொல்லோ பெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதக் கொலைகளும் காணாமல் போகடிக்கப்படுதலும் திட்டமிடப்பட்ட வகையில் இலங்கையில் நடைபெறுவதாக இந்த நோபல் பரிசாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆனாலும் நியூயோர்க்கை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைக் கண்காணிப்பகமா னது தமது நேரடியான பரப்புரையை 192 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. சபையில் தீவிரமாக மேற்கொண்டது.
அதேவேளை, இன்னொரு விடயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும்.
இலங்கைக்கு தொடர் விஜயங்களை மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை சங்க உயர் நிலை அதிகாரிகளான ஜோன் ஹோம்ஸ், லூயிஸ் ஆர்பர் அம்மையார் ஆகியோர் சமர்பித்த அறிக்கைகள், இலங்கை அரசிற்கு எதிராக எதனையும் சாதிக்கவில்லை.
அவர்கள் "வெள்ளைப் புலிகள்' என்று கேலி செய்யப்பட்டபோது மேற்குலகம் மௌன விரதம் பூண்டது. இங்கு நடைபெற்றது ஒரு இரகசிய வாக்கெடுப்பு. எவருடைய நிஜ முகத்தையும் இனங்காண முடியாத நிகழ்வு இது.
ஆகவே இவற்றிலிருந்து ஒரு விடயத்தை அறிந்து கொள்ளலாம்.
அதாவது, தெற்காசியப் பிராந்தியத்தில் அண்மைக் காலமாக ஏற்படும் அணி ஒழுங்கு மாற்றங்கள், சர்வதேச மட்டத்தில் சில அழுத்த நகர்வுகளை உருவாக்குகின்றன.
ஆகவே நேரடியாக இலங்கையை பகைத்துக் கொள்ள எந்த வல்லரசுகளும் தற்போதைய நிலையில் விரும்பவில்லையென்பதையே இவ்வகையான மறைமுக மென் அழுத்தங்கள் வெளிப்படுத்துகின்றன.
ஆயினும் இலங்கை அரசாங்கத்தை நோக்கிய அழுத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன. ஐ.நா.
சபையில் புதன்கிழமை நடைபெற்ற சில விடயங்கள் குறித்துப் பார்க்கலாம்.
சர்வதேச மனித உரிமைச் சபையின் தென்னாசியா நான்கு அங்கத்துவ நாடுகளுக்கான தெரிவும் இங்கு உள்ளடங்கியிருந்தது. போட்டியிட்ட ஆறு நாடுகளில் இரகசிய வாக்கெடுப்பில் நான்கு நாடுகளே தெ?வாகும் என்ற நிலை இருந்தது.
2006 இல் உருவாக்கப்பட்ட இச் சபையில் இலங்கைக்கு ஒரு பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தது. இது சமாதான காலம் வழங்கிய ஆறுதல் ப?சென்பதே பல?ன் கருத்து.
கடந்த புதன்கிழமை நடந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பெரும் படையணியொன்று அரசால் அங்கு அனுப்பி வைக்கப் பட்டது. அக்குழுவில் சட்டமா அதிபர் சீ.ஆர்.டீ. சில்வா, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.
விற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜெயதிலக, நீதி அமைச்சின் செயலாளர் சுகத, கமலத் போன்ற பல அரச முதுநிலை அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.
ஆனாலும் இவ்வுயர் நிலை அதிகாரிகளின் தீவிர பிரசாரத்தை விட இந்தியா மேற்கொண்ட கடும் ?யற்சியாலேயே 101 வாக்குகளை இலங்கை பெற்றது.
சர்வதேச சட்ட திட்டங்களுக்கு இசைவாக இலங்கை நடந்து கொள்வதாக புகழாரம் வேறு சூட்டியது இந்தியா. 13 ஆவது இணைப்புச் சட்டத்தினை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள் என்கிற கேள்வியை பாகிஸ்தான் கேட்டதுதான் அதிசய நிகழ்வு.
இது குறித்து சபை விவாதத்தில் ஈடுபட்ட காந்தி தேசம், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்தோ அல்லல்படும் உள்ளூர் மக்களின் அடிப்படை மனித உரிமை குறித்தோ வாய் திறக்கவில்லை.
அதாவது சீனாவின் வலைக்குள் முற்று முழுதாக இலங்கை விழுந்து விடாமல் தடுக்க இந்தியா போடும் தடுப்பு அரண்கள் தற்போது அம்பலமாகியுள்ளது. எத்தனையோ தடவைகள், இவ்வகையான அழுத்தம்மிக்க நெருக்கடி நிலைகளிலிருந்து இலங்கை அரசாங்கத்தை மீட்டெடுத்த இந்திய தேசத்தால் இம்?றை எதுவுமே செய்ய இயலாமல் போயுள்ளது.
ஆகவே சர்வதேஅரங்கில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள இந்த அரசியல் இராஜதந்திர பின்னடைவில் இந்தியாவிற்கு சமபங்கு உண்டென்பதை உணர்ந்து கொள்ளலாம்.
ஆனாலும் ஜீ.எஸ்..பீ. பிளஸ் என்கிற பொரு ண்மிய அழுத்தங்கள் அரசு மீது பிரயோகிக்கப்படும் பொழுதுதான் இலங்கையின் பிராந்திய அணி சேரலிற்கான இறுதிப் பாதையை இனங்காண முடியும்.
இவ்வழுத்தம் பிரயோகிக்கப்படக்கூடிய ஏது நிலைகள் அரிதாக இருந்தாலும் அவ்வாறு நடைபெற்றால் இந்திய தேசமானது தென்னாசி யப் பிராந்தியத்தில் தனிமைப்படும் வாய்ப்பு உருவாகும்.
அதேவேளை இந்நிகழ்வின் தொடர் விளைவுகள் எவ்வாறு தோற்றம் பெறலாமென்பதையும் சற்று ஆராய வேண்டும்.
ஏற்கனவே முடிவுகள் வெளியாகியவுடன் சர்வதேச காணாமல் போகடிக்கப்பட்டோர் சங்கத்தினால் ஹெய்க்கிலுள்ள சர்வதேச நீதிமன்றில் அரசிற்கெதிரான மனுவொன்று சாட்சியங்களுடன் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆகவே ஐ.நா. மனித உரிமைச் சபைக்கான அங்கத்துவப் போட்டியில் இலங்கை நிராகரிக்கப்பட்டதன் எதிர்விளைவுகள் பல சிக்கல்களையும் தடுமாற்றங்களையும் இலங்கைக்கு ஏற்படுத்தப் போகிறது.
ஆர்பர் அம்மையார், ஜோன் ஹோம்ஸ் சமர்ப்பித்த அறிக்கைகள், ஆவணக் காப்பகங்களிலிருந்து தூசு தட்டி எடுக்கப்பட்டு புதிய அழுத்தங்களை தோற்றுவிக்கும் அஸ்திவாரங்களாக மாறி, ஐ.நா. சபையூடாகச் சில தீர்மானங்களை உருவாக்கும் நிலையைத் தோற்றுவிக்கும்.
தற்போது மேற்குலகானது தமது மென் அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது.
மிகத் தீவிரமான உதாசீனப்படுத்தும் போக் கினை இதன் எதிர்வினைச் செயற்பாடாக இலங்கை வெளிப்படுத்தினால் ஜீ.எஸ்.பீ. பிளசிற்கும் ஆபத்து ஏற்படும்.
ஆனாலும் புதன்கிழமை நடைபெற்ற ஐ.நா.
சபை கூட்டத்தில் ஒரு விடயம் வெளிச்சமாகியுள்ளது. அதாவது தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரங்கள் சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலவசமான சர்வதேச பரப்புரை இது. அதேவேளை இவ்வாக்கெடுப்பு நிகழ்வும் கிழிக்கப்பட்ட பே?னவாத பயங்கரவாத முகமும், தமிழ் மக்களுக்கான அடிப்படை அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்குமாவென்பதை பொறுத்திருத்து பார்க்க வேண்டும்.
Saturday, 24 May 2008
மாற்றமடைந்து வரும் சர்வதேச அணுகுமுறைகள்--இதயசந்திரன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment