Saturday, 24 May 2008

அனைத்துலகத்தின் கடும் போக்கும் கடுமயான போர் முனைகளும்--வேல்ஷ்லிருந்து அருஷ்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் மீண்டும் இடம் பிடிப்பதற்காக இலங்கை அரசு கடுமையாக முயன்று வந்ததுடன், அதற்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளும் ஆதரவு வழங்கியிருந்தன. இருந்த போதும் இறுதியில் இலங்கை தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமை சபையில் இருந்து இலங்கையை தள்ளிவைக்குமாறு நோபல் பரிசு பெற்றவர்களான அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர், தென்ஆபிரிக்கா பேராயர் டெஸ்மன்ட் ருட்டு, ஆர்ஜென்ரினாவைச் சேர்ந்த அடோல்ப் பரேஸ் எஸ்குவல் ஆகியோர் உட்பட பல மனித உ?மை அமைப்புக்களின் பிரதிநிதிகளும், தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கோரிக்கைகளை விடுத்திருந்தனர்.

ஐ.நா. மனித உரிமை சபையில் இருந்து இலங்கை நிராகரிக்கப்பட்டது, ஐ.நாவின் உறுப்புரிமை நாடுகள் தமது அங்கத்துவ நாடுகளின் மனித உரிமை செயற்பாடுகள், தகுதிகள் தொடர்பாக கடுமையான போக்கை கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளதை காட்டுகின்றது என அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இவற்றைவிட வழமையாக உதட்டில் கவலைகளையும், உள்ளூர இலங்கைக்கான ஆதரவுகளையும் வழங்கி வந்த மேற்குலகத்தின் நழுவல் போக்கில் ஏற்பட்ட மாற்றமே இலங்கையின் தோல்விக்கு மற்றுமொரு காரணம். இலங்கை அண்மையில் ஏற்படுத்திவரும் புதிய கூட்டணிகள், தெற்காசிய பிராந்தியத்தில் ஏற்படப்போகும் முனைவாக்கம் என்பன இலங்கையின் ?ன்னைய நழுவல் போக்குகளுக்கு சாவுமணி அடித்துள்ளது.

உலக ஒழுங்கில் இலங்கை அந்நியப்படுத்தப்பட்டு வருவது அதிகரித்து வருகையில் இலங்கையின் களநிலைமைகளும், அரசியல் நிலைமைகளும் மீண்டும் ஒரு நெருக்கடியான கட்டத்தை தொட்டுள்ளன.

வன்னியில் விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் மரணமடைந்ததனால், வன்னிப் பகுதி சோகமயமாகி உள்ளது.

மேலும் புலம்பெயர் நாடுகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் பல தளபதிகளின் வரலாறுகள் பதிவாகி இருந்தாலும், பாலராஜின் போரியல் அனுபவம் வேறுபட்டது. இந்திய இராணுவத்தின் முற்றுகை காலத்தில் மணலாற்றில் நடைபெற்ற சமரில் இருந்து, தற்போது வரையிலும் அவரின் போரியல் அனுபவங்கள் மிக மிக அதிகம்.

1990 களில் நடைபெற்ற மாங்குளம், கொக்காவில் படைமுகாம்கள் தகர்ப்பு, 1991 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆகாய கடல்வெளி சமர், 1993 களில் மேற்கொள்ளப்பட்ட மண்கிண்டி படைமுகாம் தகர்ப்பு, 1993 ஆம் ஆண்டு நவம்பர் மேற்கொள்ளப்பட்ட பூநகரி படைமுகாம் தகர்ப்பு, அதற்கு முன்னர் நடைபெற்ற யாழ்.தேவி படை நடவடிக்கை முறியடிப்பு, 1995 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புலிப்பாய்ச்சல் நடவடிக்கை, 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற முல்லைத்தீவு முகாம் தகர்ப்பு (ஓயாதஅலைகள் 01), 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பரந்தன் ஆட்டிலறி பீரங்கித்தளம் மீதான ஊடறுப்புச் சமர், 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் செப்டம்பரில் நடைபெற்ற கிளிநொச்சி தளம் தகர்ப்பு (ஓயாத அலைகள்2), 1999 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓயாதஅலைகள்03, 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனையிறவு பெரும் தளம் தகர்ப்பு, 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தீச்சுவாலை முறியடிப்பு என்பன பிரிகேடியர் பால்ராஜ் வழிநடத்திய மற்றும் முக்கிய பங்கு வகித்த சமர்களில் முக்கியமானவை.

பூநகரி முகாம் தகர்ப்பில் அவர் காயமடைந்த போது அவரது காலை அகற்ற வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறிய போதும், தீவிர சிகிச்சைக்கு பின்னர், அந்த முடிவு பின்னர் மாற்றப்பட்டது. அவரின் முக்கியத்துவம் உணர்ந்து விடுதலைப்புலிகளும் அதற்கு சம்மதிக்கவில்லை. பின்னர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு போர்நிறுத்த காலத்தில் சிங்கப்பூரில் அறுவைச்சிகிச்செய்யப்பட்டிருந்தது.

அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் திட்டமிடல், தாக்குதல் உத்திகளை பயிற்றுவித்தல் போன்றவற்றில் ஈடுபட்டிருந்த பிரிகேடியர் பால்ராஜ் உக்கிரமான களமுனைகளுக்கு சென்று ஆலோசனைகள் வழங்கி வந்ததுடன், தாக்குதல் திட்டங்களுக்கான தீவிர பயிற்சிகளையும் வழங்கி வந்திருந்தார்.

இந்த வருட ஆரம்பத்தில் இருதய நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அவர், கடந்த மூன்று மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் மன்னார் மற்றும் மணலாறு களமுனைகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வந்ததுடன், இடையிடையே அவற்றை சென்று பார்வையிட்டும் வந்ததாகவும் வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன.

2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வடமராட்சி கிழக்கின் குடாரப்பில் தரையிறங்கிய பால்ராஜ் இரண்டு பற்றாலியன் சிறப்பு படையினருக்கு எதிராக ஆனையிறவு சமரை வழிநடத்தினார். விடுதலைப்புலிகளின் போ?யல் ஆளுமை தொடர்பாக தென் ஆசியா கண்டத்தில் பாரிய ஆச்சரியத்தை தோற்றுவித்திருந்தது.

இதனிடையே வடபோர்முனையில் இந்த வாரம் மோதல்கள் மந்த நிலையை அடைந்துள்ளன. கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுகிழமை மன்னார் களமுனையின் வடமுனையில் இடம்பெற்ற உக்கிர மோதல்களை தொடர்ந்து இந்த மந்த நிலை தோன்றியுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி அதிகாலை இராணுவத்தின் 58 ஆவது படையணியின் 3ஆவது பிரிகேட்டைச் சேர்ந்த 3 பற்றாலியன் இராணுவத்தினர் கேணல் சுராஜ் பன்சஜய தலைமையில் இருக்கண்டல்குளம் ஊடாக வண்ணாங்குளம் நோக்கி நகர முற்பட்ட போது கடுமையான சமர் வெடித்திருந்தது.

சத்தமின்றி நகர்ந்து விடுதலைப்புலிகளின் நிலைகளை கைப்பற்றும் நோக்குடன், அதிகாலை 3.30 மணியளவில் படையினர் நகர்வை ஆரம்பித்த போது, படைச்சிப்பாய் ஒருவர் ஜொனி மிதிவெடியில் சிக்குண்டதால் படையினரின் திட்டம் திசைமாறியதுடன், மோதல்களும் ஆரம்பித்தன.

விடுதலைப்புலிகளின் அணிகள் சிறு ஆயுதங்கள் கொண்டு நேரடியாக மோதியதுடன், 120 மி.மீ, 81 மி.மீ மற்றும் 60 மி.மீ ராகவன் மோட்டார்களும், 122 மி.மீ பீரங்கிகளையும் அவர்கள் பயன்படுத்தியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இராணுவம் 153 மற்றும் 122 மி.மீ பீரங்கிகள், 122 மி.மீ பல்குழல் உந்துகணை செலுத்திகளை செறிவாகப் பயன்படுத்தியிருந்தது. எனினும் வயல் வெளிகளுக்கு ஊடாக நகர்ந்த படையினர் இந்த தீவிர தாக்குதலில் நிலையெடுக்க முடியாது போய்விட்டதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோதல்களில் 26 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் 6 இராணுவத்தினரின் சடலங்களும், இரு ஆர்.பி.ஜி உட்பட பெருமளவான ஆயுதங்களும் தம்மால் கைப்பற்றப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். தமது தரப்பில் 3 பேர் பலியானதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தேடுதல்கள் தொடர்வதாகத் தெரிவித்த விடுதலைப்புலிகள் பின்னர் 22 ஆம் திகதி வியாழக்கிழமை இராணுவத்தினரின் மேலும் 3 சடலங்களும், ஒரு தொகுதி ஆயுதங்களும் மீட்கப்பட்டதாகத் தெ?வித்துள்ளனர்.

இதனிடையே கருங்கண்டல் ஊடாக இராணுவத்தின் 58 ஆவது படையணியின் 2ஆவது பிரிகேட் படையினர் வண்ணாகுளம் நோக்கிய நகர்வை மேற்கொண்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மோதல்கள் உக்கிரமடைந்ததை தொடர்ந்து வான்படையின் 9 ஆவது ஸ்குவாட்ரனை சேர்ந்த எம்.ஐ24 தாக்குதல் உலங்குவானூர்தி ஒன்றும் படையினரின் முன்னணி அரண்களை அண்டிய பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

எனினும் இந்த மோதல்களில் தமது தரப்பில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 15 இற்கு மேற்பட்டோர் காயமடைந் துள்ளதாகவும் படைத்தரப்பு தெ?வித்துள்ளது.

தமது நிலைகளை நன்கு பலப்படுத்தி உள்ள விடுதலைப்புலிகள் இந்த பகுதியில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், நெல் வயல்களை அதிகம் கொண்ட வெளிகளினூடாக நகரும் படையினர் நேரடியற்ற சூடுகளில் அதிக இழப்புக்களை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தமக்கு சாதகமற்ற இடங்களை தவிர்த்து வரும் விடுதலைப்புலிகள் சாதகமான களமுனைகளில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இராணுவத்தினரை பொறுத்தவரையில் இந்த நடவடிக்கையின் இலக்கு என்ன என்பது தொடர்பாக தெளிவாக தெ?விக்காத போதும், ஏ32 வீதியை படிப்படியாக கைப்பற்றி பூநகரியை கைப்பற்றுவதே நீண்டகாலத் திட்டம்.

பூநகரியை பொறுத்தவரையில் யாழ். கடல் நீரேரியை மையமாகக் கொண்டு அமைந்துள்ளதனால் அதன் முக்கியத்துவம் அதிகமானது. அதில் இருந்து கிழக்கு நோக்கிய நெடுஞ்சாலை பரந்தன் கிளிநொச்சிக்கும், மேற்கு நோக்கிய நெடுஞ்சாலை மன்னாருக்கும் செல்வது கேந்திர முக்கியத்துவம் மிக்கது.

1996 ஆம் ஆண்டு கிளிநொச்சி நோக்கி மேற்கொள்ளப்பட்ட சத்ஜெய படை நடவடிக்கை மற்றும் முல்லைத்தீவு முகாம் தாக்குதலின் எதிரொலி போன்றவற்றினால் பூநகரி முகாம் அரசினால் கைவிடப்பட்டபோது தென்னிலங்கை படைத்துறை ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் விமர்சனங்கள் தோன்றியிருந்தன. எனினும் கிளிநொச்சியை கைப்பற்ற போகின்றோம் என்ற அரசின் அறிவித்தல் அதனை ஓரளவு தணித்திருந்தது.

பூநகரி மன்னார் இடையே பயணிக்கும் இந்த ஏ32 நெடுஞ்சாலை பாக்குநீரணைக்கு சாமாந்தரமாக செல்வதனால் அதன் முக்கியத்துவம் அதிகமானது என்பது அரசின் கணிப்பு. வன்னி நிலப்பரப்பின் மேற்குப்புறம் இந்த பகுதியினூடாக கடலுடன் நேரடி தொடர்புகளை கொண்டுள்ளதும், அதனால் விடுதலைப்புலிகளுக்கு பெரும் அனுகூலங்கள் உள்ளன என்பதும் படைத்தரப்பின் வாதம்.

இதனை கைப்பற்றுவதன் மூலம் விடுதலைப்புலிகளினதும், வன்னி மக்களினதும் நகர்வுகளை முடக்கி விடலாம் என்பதும் படைத்தரப்பின் உத்தி. இந்த கடற்பரப்பின் ஆழமற்ற தன்மை கடற்படையின?ன் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி வருவதாகவும் படைத்தரப்பு தெரிவித்து வந்துள்ளது.

எனவே தான் ஏ9 நெடுஞ்சாலையை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட வெற்றி நிச்சயம் படை நடவடிக்கை போன்று, ஏ32 நெடுஞ்சாலையை கைப்பற்றும் பெய?டப்படாத படை நடவடிக்கை மூலம் படையினர் மெல்ல மெல்ல நகர்ந்து வருகின்றனர். நெல் விளையும் பேழை எனப்படும் இந்த பூமியின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் படை நடவடிக்கையானது அங்கு வாழும் மக்களின் விவசாயத்திலும் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன், ஏற்கனவே பெருளாதார தடைகளினால் அல்லலுறும் மக்களுக்கு மேலதிக அழுத்தங்களையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்று கருத்துக்கள் இருக்க முடியாது.

ஆனால் ஏறத்தாள 60 கி.மீ நீளமான இந்த சாலையை கைப்பற்றவும், அதனை தக்கவைக்கவும் படையின?ன் வளங்கள் போதுமா என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

வெற்றி நிச்சயம் படை நடவடிக்கை கற்று கொடுத்த பாடமும் அது தான்.

போரியல் உத்திகளில் சீன போரியல் மேதை சன் சூ வின் உத்திகள் முக்கியமானவை.

இன்றும் பல நாட்டு இராணுவங்கள் பயன்படுத்தும் உத்திகள் அவை. ஏராளமான உத்திகளில் பின்வரும் ஒரு போரியல் வியூகம் சமச்சீரற்ற பேருக்கு நன்றாக பொருந்தும்.

அதாவது, "எமது படையினரின் எண்ணிக்கை எதிரியை விட பத்து மடங்கு அதிகமானால் எதிரியை முற்றுகையிடு' "எமது படையினரின் எண்ணிக்கை எதிரியை விட ஐந்து மடங்கு அதிகமானால் எதிரியை எதிர்த்து சமரிடு' "எமது படையினரின் எண்ணிக்கை எதிரியை விட இரு மடங்கானால் உனது படையணியை இரண்டு பகுதியாக்கு' என்பதுதான் அவரின் தத்துவம்.

சமரும், எதிர்ச்சமரும் விரிவாக்கம் பெறும் களமுனைகளும் இதன் அடிப்படையில் தான் இடம்பெற்று வருகின்றன. இராணுவம் பயன்படுத்தும் உத்திகளும் இவை தான்.

அதாவது பல முனைகளைத் திறப்பதன் மூலம் விடுதலைப்புலிகளின் படை வளத்தை திருப்பி விடலாம் என்பது அவர்களின் கணிப்பு.

ஆனால் விடுதலைப்புலிகளும் அதற்கேற்ப களங்களை விரிவுபடுத்தியே வருகின்றனர், அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலுடன் அங்கு ஆரம்பித்த தாக்குதல்கள் தீவிரமடைந்தே வருகின்றன.

கொழும்பு லோட்டஸ் வீதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு, ஆழமான தென்னிலங்கையின் புத்தல பகுதியில் நடைபெற்ற தாக்குதல், அம்பாறையில் நடைபெற்ற தாக்குதல்கள் என களமுனைகளின் விரிவாக்கம் அதிகம்.

களமுனைகளின் இந்த விரிவாக்கத்திற்கு மத்தியில், கிழக்கில் வன்முறைகள் வெடித்துள்ளன.

அரச தரப்பு வெற்றியீட்டி உள்ளது என்ற ஒரு தோற்றப்பாட்டை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு எதிரும் புதிருமான இரு அமைப்புக்களுடன் கூட்டணி சேர்ந்திருந்தது. அதன் பலாபலன்களே தற்போது கிழக்கில் எதிரொலிக்க ஆரம்பித்து விட்டன.

மூவின மக்களும் வாழும் இந்த பிரதேசத்தில் நடைபெற்ற மாகாணசபை தேர்தலும், அதில் போட்டியிட்டவர்களும் எரியும் நெருப்பில் எண்ணையை அள்ளி ஊற்றிய வேலையை தான் செய்துள்ளனர்.

இந்த வன்முறைகளின் தார்ப்பரியத்தை மாகாணசபை தேர்தல் முடிந்த கையுடன் அமெரிக்கா மிக அழகாக எடுத்து கூறியிருந்தது.

அதாவது மக்கள் தமக்கு விருப்பமான நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க முடியாது போனதால் கிழக்கில் புதிதாக வன்முறைகள் உருவாகலாம் என்ற கவலை தோன்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்த கருத்துக்கள் தற்போதைய சூழ்நிலைக்கு நன்றாகப் பொருந்துவதாகவே உள்ளன.

No comments: