Wednesday, 21 May 2008

விமலின் சுதந்திர முன்னணி கொள்கைகளை வகுக்க புத்தி ஜீவிகள்

vimal-wants-to-war.jpgவிமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் கொள்கைகளை வகுக்க புத்தி ஜீவிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் ஜீ.எச்.பீரிஸ் தலைமையில் எட்டு பேர் அடங்கிய குழு இந்த கொள்கை தொடர்பான ஆவணத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கை வகுப்பு தொடர்பில் இந்த குழு பரிந்துரைகளை சமர்பிக்கும் என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை சில சந்தர்ப்பவாதிகளின் தேவையின் அடிப்படையில், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பாரியளவில் கட்சிக்கு இல்லாமல் போயுள்ளதாக ஜே.வீ.பீயின் ஜப்பானிய குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜப்பானிய குழுவின் அமைப்பாளர் சமன் பிரியங்கர ஜே.வீ.பீயின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திர முன்னணி தவறாத அரசியல் வியூகத்தின் ஊடாக பயணிக்குமாயின் தமது குழு அந்த கட்சியின் இணைய ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக ஜே.வீ.பீயின் ஜப்பானிய குழுவின் அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

source:globaltamilnews

No comments: