Wednesday, 21 May 2008

கிழக்கு முதலமைச்சருக்கு ஈடான பதவி ஹிஸ்புல்லாவுக்கு?

ஜனதிபதி மகிந்த ராஜனக்ஸவுக்கும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான முரண்பாடு தீர்க்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண சுகாதார துறை மற்றும் முஸ்லீம் விவகார அமைச்சராக நாளை (மே22) அல்லது, ஒரு சில தினங்களில் பதவியேற்பார் என எதிர்பார்;க்கப்படுகிறது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லீம் அமைச்சர்களை ஜனாதிபதியும், பொதுநிர்வாக அமைச்சர் கருஜயசூரியவும் தனித்தனியாக சந்தித்து இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது, பிரச்சினைக்கு உரிய தீர்வுகாணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு இணையான பதவி ஒன்று ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபையின் முதலாவது கூட்ட அமர்வு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரம தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எதிர்வரும் 28 ஆம் திகதி இந்த அமர்வு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நடைமுறைப்பிரச்சினைகள் காரணமாகவே இந்த ஒத்திவைப்பு நிகழ்ந்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

No comments: