ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலுக்கான உறுப்பினர் தேர்தலில் இலங்கை தோல்வியடைந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் காலியான 15 இடங்களுக்கான தேர்தல் இன்று நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நடந்தது.
பொதுச்சபையின் 192 உறுப்பு நாடுகள் அதில் வாக்களித்தன.
ஆசிய நாடுகளுக்கான 4 காலியிடங்களுக்கான போட்டியில் இலங்கையுடன் 6 ஆசிய நாடுகள் போட்டியிட்டன. அதில் ஜப்பான் 155, பஃரைன் 142, கொரியா 139 மற்றும் பாகிஸ்தான் 114 ஆகிய நாடுகளே வெற்றிபெற்றன.
இலங்கைக்கு 101. கிழக்கு தீமோர் 92 என்ற வகையில் வாக்குகளைப் பெற்றன.
வாக்கெடுப்பில் சிறீலங்காவுக்கு 101 வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம் சிறீலங்கா 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் தெரிவாகும் நான்கு நாடுகளே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரியை பெறத் தகுதியுடையது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சிறீலங்காவுக்கு இந்தியா வாக்களித்த போதும் மேற்குலக நாடுகளின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்கா தோற்கடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான இலங்கை அரசின் செயற்பாடுகளைக் காரணம் காட்டி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூன்று பிரமுகர்களும், மனித உரிமை அமைப்புக்கள் சிலவும், இலங்கையை இந்தத் தேர்தலில் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தன.
சிறிலங்கா, பாகிஸ்தான், ஜப்பான், தென்கொரியா, கிழக்குத் தீமோர், பஹ்ரெய்ன் ஆகியவற்றில் பஹ்ரெய்னும் கிழக்குத் திமோரும் முதல் தடவையாக மனித உரிமைகள் சபைக்கான தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவைக்கான இரகசிய வாக்கெடுப்பில் ஆசிய நாடுகளை தவிர ஆஜென்டினா, பிரஸ்சில், புருகினா பாசோ, சிலி, பிரான்ஸ், கார்போன், கானா, ஸ்லோவாக்கியா, உக்ரைன், ஐக்கிய இராச்சியம், மற்றும் சிம்பாபே ஆகிய 11 நாடுகளும் புதன் கிழமை தெரிவாகின.
இலங்கையில் கடந்த வருடத்தில் அதிகளவான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் இலங்கைக்கு எதிராக போர்கொடி தூக்கியிருந்த நிலையிலேயே இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.
நியூயோர்க்கில் நடைபெறுகின்ற இரகசிய வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஐரோப்பாவை சேர்ந்த நாடுகள் சில மறைமுகமாகப் பிரசாரம் செய்துவருவதாகவும் ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாயின் தேர்தலில் இலங்கை தோல்வியடையும் சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தன.
உறுப்புரிமையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, அமைச்சர்களான ஜி. எல் பீரிஸ், மஹிந்த சமரசிங்க ஆகியோர் கடந்த சில தினங்களாக ஐரோப்பிய நாடுகளில் தீவிர பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர் இதேவேளை இந்த தேர்தலில் இலங்கை வெற்றிபெறுவதற்கான நடவடிக்கைகள் தூதரக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க நம்பிக்கை தெரிவித்திருந்தார் இந்நிலையிலேயே இலங்கை வாக்கெடுப்பில் ஐந்தாம் இடத்தை பெற்று தொதால்வியடைந்துள்ளது.
இலங்கையில் கடந்த வருடம் பாரிய மனித உரிமை மீறல்கள் , ஆட்கடத்தல்கள், பலவந்தமாக கப்பம் பெறல், அனாவசியமான முறையில் கைதுசெய்து தடுத்துவைத்தல், சித்திரவதைக்கு உட்படுத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று ஆசிய மனித உரிமைகள் அமைப்புகள் குற்றஞ்சாட்டியிருந்ததுடன் இரகசிய வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரியிருந்தன.
இதனை விட தென்னாபிரிக்காவின் ஆயர் டெஸ்மண்ட் டுட்டு, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் ஆஜன்டீனாவின் நோபல் பரிசு வென்ற அடல்போ பீரிஸ் எஸ்குவில் ஆகியோர் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு இதர நாடுகளை கோரியிருந்தனர் இந்த நிலையிலேயே வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியை தழுவியுள்ளது.
47 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவைக்கு புதிய உறுப்பு நாடுகளை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியை தழுவிக்கொண்டால் இலங்கைக்கான சர்வதேச உதவிகள் தடைபடும் அபாயம் தோன்றியிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது .
Wednesday, 21 May 2008
உலக அளவில் உத்தியோகபூர்வமாக அவமானப்பட்ட இலங்கை
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
readers can understand onething-though it has lost,it has been supported by 101 rogue nations:who are they?
Though it is a secret ballot,we can identify,India,china,japan,and i will leave it to the vieweres for guessing the remaining "rogues"
Post a Comment