Wednesday, 21 May 2008

கோட்டை குண்டு வெடிப்பு: துலங்காத மர்மங்கள்

identity-card.jpgகொழும்பு கோட்டை சம்போதி விகாரைக்கு தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரியின் போலி அடையாள அட்டை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


வெள்ளவத்தையில் வசிக்கும முஸ்லீம் ஒருவரின் பெயரில் இந்த அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளதுடன் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் விலாசம் என்பன போலியானது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடையாள அட்டையை தயாரிக்க உதவிய கிராம சேவகர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதுடன் இது தொடர்பாக பலரிடம் இதுவரை விசாரணைகள் மேற்கொள்ளபட்டுள்ளது.

தற்கொலை தாரியின் வாகன அனுமதி பத்திரமும் குறித்த அடையாள அட்டையின் தகவல்களின்படியே பெறப்பட்டுள்ளது.

சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, இந்த தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதுடன் திருகோணமமலையில் கைதுசெய்யப்பட்டுள்ள ஜனா எனபவரிடமும் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை நடத்த வருகின்றனர்.

குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்களில் கொழும்பில் எந்த பகுதியில் வைக்கட்டிருந்தது என்பது குறித்தும் காவல்துறை குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

No comments: